சிங்கப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிங்கப்பூரின் 55வது தேசிய தினக் கொண்டாட்டம் - “எங்கள் சிங்கப்பூர்” பாடல் வெளியீடு

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 55வது தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சிங்கப்பூரின் அருமைகளையும் பெருமைகளையும் எடுத்துரைக்கும் வண்ணம், "எங்கள் சிங்கப்பூர்" என்ற பாடல், சிங்கப்பூரின் தேசிய தினமாகிய இன்று வெளியிடப்பட்டது.

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யின் தலைவர், பட்டயக் கணக்காய்வாளர் முனைவர் மு. அ. காதர் எழுதிய இப்பாடலுக்கு, சிங்கப்பூர் இசைக்கலைஞர் பாடகர் "இசை மணி" பரசு கல்யாண் இசையமைத்து காணொளியாக உருவாக்கியிருக்கிறார்.

Our Singapore- National Day Celebration Special Song release

சிங்கப்பூர் வாழ் இசைக்கலைஞர்களாகிய அருண் பிரசாத், தீபக் ஐயர், கார்த்திக் மகாதேவன், மாதவன் குணா, ம்ரினல் நாராயன், மைத்ரயி வாசுதேவன், மதியழகன், பிரசாந்தி சந்தானம், ரவின் ராஜ், சேது, சோபனா ராச்சேல், சுமா பாலகிருஷ்ணா, விநாயா ராஜகோபால் மற்றும் பரசு கல்யாண் உள்ளிட்ட 14 பாடகர்கள் முதன்முறையாக இணைந்து இப்பாடலை உருவாக்கியுள்ளனர்.

சிங்கப்பூர் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர், இரா. தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, இப்பாடலை முகநூல் நேரலையில் வெளியீடு செய்து, இப்பாடலின் சிறப்பியல்புகளைப் பற்றி எடுத்துரைத்தார்.

Our Singapore- National Day Celebration Special Song release

லிஷா இலக்கிய மன்றத்தின் தொழில்நுட்ப உதவியுடன், அர்ஜுன் நாராயணன் இந்நிகழ்ச்சியை இணையம் வழி தொகுத்து வழங்கினார்.

Our Singapore- National Day Celebration Special Song release

"எங்கள் சிங்கப்பூர்; இது எங்கள் சிங்கப்பூர்; வாழ்க வாழ்கவே சிங்கப்பூர்! வளர்க வளர்கவே சிங்கப்பூர்!" எனும் பாடல் வரிகளைக் கொண்டு, நாட்டுப் பற்றை வெளிப்படுத்தும் வண்ணம் இப்பாடலும் இசையும் அமைந்துள்ளன.

Our Singapore- National Day Celebration Special Song release

இப்பாடலை https://youtu.be/mxlRUNgCems என்ற இணையப் பக்கத்தில் காணலாம்.

English summary
Ahead of Singapore National Day Celebration a Special Song - Our Singapore- was released.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X