சிங்கப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிங்கப்பூர் ஹோட்டல்களில் தங்க வேண்டுமா.. இனி வெறும் 1 நிமிடம் போதும்.. அதிரடி திட்டம் அமல்

Google Oneindia Tamil News

சிங்கப்பூர் : எப்போதுமே ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் பயணிகள், அங்குள்ள சிறந்த ஹோட்டல்களை செக் - இன் செய்ய மிகுந்த சிரமப்படுவார்கள். ஆனால் தற்போது சிங்கப்பூர் அரசு இந்த சிக்கல்களில் இருந்து பயணிகள் விடுபட சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்த ஏற்பாடுகள் மூலம் பயணிகளின் 70 சதவிகித நேரம் மிச்சமாவதுடன், அவர்கள் உடனடியாக சிறந்த ஹோட்டல்களை கண்டறிந்து அங்கு சென்று இளைப்பாறவும் வழிவகை ஏற்படுவதாகவும் ஆண்டிற்கு அந்நாட்டின் ஹோட்டல் ஊழியர்களின் 11 ஆயிரம் மணிநேரமும் மிச்சமாகும் என்று தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின் பார்வையாளர் அங்கீகாரம் என்ற இந்த புதிய நடைமுறை மூலம் ஒரு நிமிடத்தில் குடியுரிமை மற்றும் சோதனை மைய ஆணையத்திற்கு பயணிகளின் புகைப்படம் மற்றும் பாஸ்போர்ட் விவரங்கள் அனுப்பப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு உடனடியாக ஹோட்டல் சாவியும் கையில் கொடுக்கப்பட்டு விடும் என்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயணிகள் சிரமத்திற்கு தீர்வு

பயணிகள் சிரமத்திற்கு தீர்வு

இந்த புதிய நடைமுறை மூலம், பயணிகளின் பாஸ்போர்ட் ஸ்கேன் செய்யப்பட்டு, சரிபார்க்கப்படுகிறது. இதையடுத்து பயணிகளுக்கு அவர்களுக்கு தேவையான ஹோட்டல்களின் சாவியும் உடனடியாக வழங்கப்பட்டு விடுகிறது. இதனால் பயணிகளின் சிரமம் அதிகளவில் குறைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் விளக்கம்

அமைச்சர் விளக்கம்

இந்த புதிய முயற்சியால், ஹோட்டல்களில் இருந்து வந்து விமானநிலையங்களில் செயல்படும் ஊழியர்களின் நேரம் ஆண்டிற்கு 11 மணிநேரங்கள் மிச்சமாகும் என்று சிங்கப்பூரின் தொழில் மற்றும் வர்த்தக இணையமைச்சர் சீ ஹாங் தட் தெரிவித்துள்ளார். இந்த முக அடையாள தொழில்நுட்பத்தின் மூலம் செக்-இன் நடைமுறையின் இடைவெளி கணிசமாக குறைந்துள்ளதாக சிங்கப்பூரின் பிரபல கிராண்ட் பார்க் சிட்டி ஹால் ஹோட்டலின் பொது மேலாளர் ஜான் கோக்கன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

5 நிமிடத்திலிருந்து 1 நிமிடம்

5 நிமிடத்திலிருந்து 1 நிமிடம்

இதன்மூலம் தோராயமாக பயணிகள் மற்றும் ஊழியர்களின் நேரம் மிச்சமாகும் என்று தெரிவித்துள்ள ஜான் கோக்கன், இந்த செக்-இன் நேரம் தோராயமாக 5 நிமிடங்களில் இருந்து 1 நிமிடமாக குறைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

அமைச்சர் அறிவிப்பு

அமைச்சர் அறிவிப்பு

மேலும் இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம், பல தளங்களில் சிறப்பாக செயல்படும் ஊழியர்களை ஹோட்டல்கள் பணியமர்த்திக் கொள்ள வழிவகை ஏற்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

English summary
It now takes just 1 minute to check-in at Singapore hotels with new kiosks that send your photo to ICA for verification
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X