சிங்கப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி ஆடு, கோழி கசாப்பு கடைக்கு போகாது.. கொல்லாமலே மட்டனும், சிக்கனும் சாப்பிடலாம்.. அசத்தல்

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: ஆடு அல்லது கோழிகளை பண்ணைகளில் வளர்த்து அதை இறைச்சிக்காக வெட்டுவதற்கு இனி அவசியம் வராது போல இருக்கிறது.

ஆய்வகங்களில் இறைச்சியை உற்பத்தி செய்து அதை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு உலகத்திலேயே முதல் முறையாக சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

உடல் ஆரோக்கியம், கால்நடைகளின் நலன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி சமீபகாலமாக பேச்சுக்கள் அதிகமாக எழுந்து வருகின்றன. எனவே இதற்கு மாற்றாக ஆய்வகங்களில் இறைச்சிகளை உற்பத்தி செய்து வழங்குவது இயற்கை விவசாயம் போல ஒரு ஆப்ஷனாக மாறக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

மூணாறில் சுற்றுலா பயணிகள் 100 ரூபாயில் ஏசி பஸ்ஸில் தங்கும் வசதி.. செம்ம வரவேற்புமூணாறில் சுற்றுலா பயணிகள் 100 ரூபாயில் ஏசி பஸ்ஸில் தங்கும் வசதி.. செம்ம வரவேற்பு

அமெரிக்க நிறுவன்

அமெரிக்க நிறுவன்

'ஈட் ஜஸ்ட்' என்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு சிங்கப்பூர் அரசு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. விலங்கினத்தின் உடல் திசுவில் இருந்து பிரிக்கப்பட்ட செல்களைக் கொண்டு ஆய்வகத்தில் இறைச்சி உற்பத்தி நடைபெறுகிறது. இதுபோல உற்பத்தி செய்வதற்கு செலவு அதிகம் பிடிக்கிறது. ஆனால் வருங்காலத்தில் இந்த செலவீனம் குறையக்கூடும் என்று கூறப்படுகிறது. சுமார் 50 டாலர் என்ற அளவுக்கு விலை இருந்த நிலையில் அடுத்த ஆண்டு முதல் இது மேலும் குறையும் என்று பண்ணை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வரும் காலம்

வரும் காலம்

உலக அளவில் 20க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள், ஆய்வகத்தில் மீன், ஆட்டு இறைச்சி, சிக்கன் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 2029 ஆம் ஆண்டில் இது போன்ற ஆய்வகத்தில் உற்பத்தி செய்யக்கூடிய இறைச்சிகளில் சந்தை மதிப்பு 140 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருக்கக்கூடும் என்று ஒரு கணிப்பு தெரிவிக்கிறது.

இறைச்சி கூடங்கள்

இறைச்சி கூடங்கள்

சீனாவிலிருந்து கொரோனா பரவிய பிறகு, இறைச்சி கூடங்களில் இருந்து நோய்கள் பரவுகின்றன என்ற வாதம் அதிகரித்து வரும் நிலையில், ஆய்வக இறைச்சி உற்பத்தியால் இந்த பாதிப்பு ஏற்படாது என்று கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் திருப்புமுனை

சிங்கப்பூரில் திருப்புமுனை

இறைச்சி என்பது மனிதன் தோன்றிய காலம் முதல் புசிக்கப்பட்டு வரும் ஒரு உணவு. வேட்டையாடி, விலங்குகளின் இறைச்சியை மட்டுமே மனிதன் உண்டு வாழ்ந்ததான் மனிதன். பிறகு விவசாயம் வந்தது. தமிழர்களிடம், மாமிசம் சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருப்பது என்ற பழக்கம் ஆதி நெடுங்காலம் முதல் தொடர்ந்து இருந்து வருகிறது. கோவில்களிலும் மாமிச படையல், விருந்தினருடன் இணைந்து மாமிச விருந்து என தமிழர்கள் வாழ்வியலின் முக்கிய பங்கு ஊன் உணவுக்கு உண்டு. இத்தகைய நீண்ட நெடிய மனித குல வரலாற்றின் இறைச்சி சாப்பிடும் பழக்கத்தில் முதல்முறையாக, ஆய்வகத்தில் இறைச்சிகளை உற்பத்தி செய்யும், முதல் திருப்புமுனை, சிங்கப்பூரில் ஆரம்பித்து உள்ளது என்று சொல்லலாம்.

English summary
For the first time in the world, Singapore has allowed the sale of lab grown meat, an US based startup, eat just, will get 1st regulator approval for this clean meat which is does not come from slaughtered animals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X