சிங்கப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

45 ஆண்டு திருமண வாழ்க்கையையே சிதைத்த பூனை- அதுவும் அந்த சிறுநீர் பஞ்சாயத்து- விவாகரத்தில் முடிந்தது

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: பூனைகள் மீது மிக அதிகமான அன்பை கொட்டியதால் 45 ஆண்டுகால திருமண வாழ்க்கையையே ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் முறித்து கொண்ட சம்பவம் ஒன்று சிங்கப்பூரில் நிகழ்ந்துள்ளது.

சிங்கப்பூரில் 1975-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் நீதிமன்றத்தில் விசித்திர வழக்கை தாக்கல் செய்தனர். நீதிமன்றத்தில் கணவர் தாக்கல் செய்த மனுவில், தாம் ஓய்வு பெற்ற ஆசிரியர். 2006-ம் ஆண்டு வரை நாங்கள் இருவரும் ஒன்றாகவே வாழ்ந்தோம்.

 விஷம் குடித்து கொண்டே செல்பி.. வாயில் நுரை தள்ளியபடி.. துடிதுடித்து உயிரைவிட்ட நடிகை.. ஷாக்..! விஷம் குடித்து கொண்டே செல்பி.. வாயில் நுரை தள்ளியபடி.. துடிதுடித்து உயிரைவிட்ட நடிகை.. ஷாக்..!

 பூனைக்காக விவாகரத்து

பூனைக்காக விவாகரத்து

ஆனால் என் மனைவி பூனைகள் மீது அதிக பிரியம் கொண்டவராக இருக்கிறார். வீடு முழுவதும் பூனைகளாக இருக்கின்றன. அது எனக்கு தொந்தரவாக இருக்கிறது. ஆகையால் விவாகரத்து வேண்டும் என்று அந்த ஆசிரியர் கூறியிருந்தார்.

பூனைக்காக வீட்டை விட்டு ஓட்டம்

பூனைக்காக வீட்டை விட்டு ஓட்டம்

அத்துடன் அவர் பூனைகளுக்கும் மனைவிக்குமான உறவுகள் குறித்தும் அந்த விவாகரத்தில் விவரித்திருந்தார். பல ஆண்டுகளாக பூனைகளை மனைவி வளர்த்து வருகிறார். இந்த பூனைகள் வீடு முழுவதும் சிறுநீரையும் மலத்தையும் கழித்துவிடுகின்றன. ஒருமுறை என் உடல் மீதும் பூனைகள் சிறுநீர் கழித்துவிட்டது; இதனால் வீட்டைவிட்டே ஓடிவிட்டேன் என குமுறியிருக்கிறார்.

பணத்தை அபேஸ் செய்த மனைவி

பணத்தை அபேஸ் செய்த மனைவி

மேலும் ஓய்வூதியமாக தமக்கு 500 ஆயிரம் வெள்ளி கிடைத்தது. இதில் வீட்டு கடன்கள் அடைக்கப்பட்டு வங்கிகளில் சேமிப்பாக வைத்திருந்தேன். இந்த பணத்தையும் மனைவி எனக்கு தெரியாமல் பயன்படுத்தி வந்தார். இதில் இருந்து மகனுக்கு 200 ஆயிரம் வெள்ளியை கார்வாங்கவும் மனைவி கொடுத்துவிட்டார் என்பது மற்றொரு புகார்.

 விவாகரத்து கொடுத்த கோர்ட்

விவாகரத்து கொடுத்த கோர்ட்

2006-ம் ஆண்டு முதல் இந்த விசித்திர விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வினோத வழக்கை விசாரித்த நீதிபதி, இனியும் இருவரும் இணைந்து வாழ முடியாது என்பது தெளிவாகிவிட்டது. ஆகையால் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்படுவதாக தீர்ப்பளித்தார். ஆனால் மனைவியோ இந்த விவாகரத்தை ஏற்காமல் அப்பீல் செய்வேன் என அடம்பிடிக்கிறார்.

English summary
A Singapore man got divorce from wife for cat obsession.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X