சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் அமைச்சரவை இன்று பதவியேற்பு.. தமிழர்களுக்கு வாய்ப்பு
சிங்கப்பூர்: பிரதமர் லீ சியென் லூங் அமைச்சரவை சிங்கப்பூரில் இன்று பதவியேற்கிறது. இதில் நிறைய தமிழர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் சிங்கப்பூரில் நாடாளுமன்றத் தேர்தல் சர்ச்சைகள் இன்றி நடந்து முடிந்தது. இதில் பிரதமர் லீ சியென் லூங் தலைமையில் அமைந்த மக்கள் செயல் கட்சியின் ஆட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

'
மொத்தம் 26.5 லட்சம் வாக்காளர்கள் இத்தேர்தல் மூலம் 93 எம்பிக்களைத் தேர்ந்தெடுத்தனர். இந்நிலையில் பிரதமர் லீ சியென் லூங் வெள்ளிக்கிழமை தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார், இந்த அமைச்சரவையில் மூத்த அமைச்சர்கள் மட்டுமின்றி புதிதாக இளையவர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் சிங்கப்பூர் அதன் மோசமான நெருக்கடிக்கு செல்லும் இந்த வேளையில் புதிய அமைச்சர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஆட்சியில் 15 அமைச்சுகளில் ஆறு அமைச்சர்கள் புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். டாக்டர் டான் சீ லெங், 55 , மூத்த அமைச்சர்கள் தியோ சீ ஹீன் மற்றும் தர்மன் சண்முகரத்னம் உட்பட பெரும்பாலான பழைய அமைச்சர்கள் மீண்டும் அமைச்சர்கள் ஆகிறார்கள்.
இன்று பிரதமர் லீ சியென் லூங் தலைமையில் அமைச்சரவை பதவியேற்கிறது.
இந்தியர்களின் கனவை காலி செய்த ஆஸ்திரேலியா.. புலம் பெயர்தோர் விவகாரம்.. எடுத்த அதிரடி முடிவு