சிங்கப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சாதான் பிரச்சனை சரியாகும்.. சிங்கப்பூருக்கே என்ன நிலைன்னு பாருங்க!

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நிரந்தரமாக குடியிருக்கும் குடிமகன்கள் இடையே கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த 3 வாரங்களில் இல்லாத அளவிற்கு பதிவாகி உள்ளது. இதேபோல் சிங்கப்பூரில் வெறும் வாரத்தில் 13 ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கிடுகிடுவென கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில அதை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு பாதிப்பு குறைந்தது போல் தெரியவில்லை. தினசரி 450க்கும் அதிகமானோருக்கு தொற் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் இடையே தான் தொற்று பாதிப்பு தினசரி அதிகரித்து வருகிறது. நேற்று 448 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 614 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Singapore reports new COVID-19 cases hit its highest level among citizens in more than 3 weeks

கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வந்த போதிலும் உயிரிழப்பு என்பது மிக குறைவு ஆகும். 30,426 பேர் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெறும் 23 பேர் மட்டுமே இறந்துள்ளனர். 12117 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதனிடையே சிங்கப்பூர் குடிமக்கள் இடையே ஏப்ரல் 27ம் தேதி அதிகபட்சமாக 14 பேருக்கு தொற்று பரவி இருந்தது. அதன்பிறகு நேற்று தான் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மே 10 முதல், சிங்கப்பூர் நிரந்தர மக்களிடையே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஐந்துக்கும் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் முதல்முறையாக இரட்டை இலக்கங்களுக்கு தொற்று பாதிப்பு சென்றுள்ளது.

வேகமாக உருமாறியது.. வித்தியாசமாக இருக்கிறது.. சீனாவை மிரட்டும் வேகமாக உருமாறியது.. வித்தியாசமாக இருக்கிறது.. சீனாவை மிரட்டும் "அப்டேட்டட் கொரோனா".. புது பீதி!

சிங்கப்பூரில் ஏப்ரல் 1ம் தேதியாக இருந்த கொரோனா தொற்று இன்று 30 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 50 நாளில் சராசரியாக 600 பேருக்கு தொற்று அதிகரித்து வந்துள்ளது. கொரோனா தொற்றை சமாளிக்க சிங்கப்பூர் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேநேரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தற்போது படிப்படியாக தளர்த்தப்படுகிறது. வீட்டமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளிலும் தனியார் வீடுகளிலும் வசிக்கும் ஏறத்தாழ 85,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு 21ம் தேதி முதல் வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

கொரோனா பரவலுக்கு முந்திய நிலைக்கு சிங்கப்பூர் எளிதில் திரும்பாது என்றும் கிருமியிலிருந்து காப்பாற்றும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரையில் பாதுகாப்பு நடைமுறைகள் தொடரும் என்று அந்நாட்டு அமைச்சர்கள் கடந்த 20ம் தேதி தெரிவித்து இருந்தார்கள். சிங்கப்பூர் ஜுன் மாதம் மாதம் முதல் படிப்டியாக தளர்வுகளை அளிக்க திட்டமிட்டுள்ளது

English summary
The number of new COVID-19 cases among Singaporeans or permanent residents hit its highest level in more than three weeks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X