சிங்கப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிங்கப்பூர்: இந்தியர்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகள் மேலும் 2 வாரம் நீட்டிப்பு

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பணிபுரியும் இந்தியர்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகள் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இன்று மேலும் 932 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிங்கப்பூரில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 17,101 .

Singapore: Stay home notice for foreign workers extended to May 18

இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள். சிங்கப்பூரில் 85% கொரோனா பாதிப்பு வெளிநாட்டு தொழிலாளர்களால் ஏற்பட்டிருக்கிறது.

இந்த தொழிலாளர்கள் தங்கி இருக்கும் இடங்களில்தான் கொரோனா மிக அதிகமாக பரவி வருவதாக சிங்கப்பூர் அரசு கூறி வருகிறது. இந்த நிலையில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகளை மேலும் 2 வாரங்களுக்கு சிங்கப்பூர் அரசு நீட்டித்திருக்கிறது.

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 1,993 பேருக்கு கொரோனா பாதிப்பு- மத்திய அரசு இந்தியாவில் 24 மணிநேரத்தில் 1,993 பேருக்கு கொரோனா பாதிப்பு- மத்திய அரசு

அதாவது S pass வைத்திருக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் அனுமதி அட்டைதாரர்கள் ஆகியோர் மே 4-ந் தேதி வரை வீடுகளிலேயே இருக்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவு மே 18-ந் தேதி அதாவது மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நிறுவனங்கள் செய்து தர வேண்டும் என்றும் சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டிருக்கிறது.

English summary
Stay home notice to foreign workers in the construction sector extended by another 14 days in Singapore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X