சிங்கப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா நோயாளிகளிடம் இருந்து எத்தனை நாட்களுக்கு பின் நோய் பரவாது.. சிங்கப்பூர் சூப்பர் கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தொற்று நோய் நிபுணர்களின் புதிய ஆய்வின்படி, கொரோனா நோயாளிகள் நோய்வாய்ப்பட்டு 11 நாட்களுக்குப் பிறகு புதிதாக யாருக்கும் அவர்களிடம் இருந்து தொற்றுநோய் பரவவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

சீனாவில் இருந்து ஜனவரி 3வது வாரத்தில் உலக நாடுகளுக்கு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் அப்போது வெறும் 500 பேருக்குதான் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் இன்று உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 50 லட்சம் பேரை பாதித்துள்ளது. 3லட்சத்துக்கும் அதிகமான மக்களை கொரோனா வைரஸ் கொன்றுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் செத்து மடிந்து வருகிறார்கள். ஆனால் இதுவரை இதற்கு தடுப்பூசியோ அல்லது தடுப்பு மருந்தோ கண்டுபிடிக்கப்படவில்லை.

இதுவரை இல்லாத அளவிற்கு கேஸ்கள்.. ஒரே நாளில் தமிழகத்தில் 805 பேருக்கு கொரோனா.. 17000 ஐ தாண்டியது! இதுவரை இல்லாத அளவிற்கு கேஸ்கள்.. ஒரே நாளில் தமிழகத்தில் 805 பேருக்கு கொரோனா.. 17000 ஐ தாண்டியது!

தடுப்பு மருந்துகள்

தடுப்பு மருந்துகள்

ஆனால் அதேநேரம் உலகின் பல்வேறு நாடுகளும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கவும், நோய் தொற்றை பரவாமல் தடுக்கவும் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றன. தடுப்பு மருந்துகள் இதுவரை பரிசோதனை அளவில் தான் உள்ளன. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க இன்னும் ஓராண்டு ஆகும் என்ற நிலையே தற்போது உள்ளது. இதனால் உலகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றன.

11 நாளைக்கு பின் பரவாது

11 நாளைக்கு பின் பரவாது

இந்நிலையில் சிங்கப்பூரில் தொற்று நோய் நிபுணர்களின் புதிய ஆய்வின்படி, கொரோனா நோயாளிகள் நோய்வாய்ப்பட்டு 11 நாட்களுக்குப் பிறகு புதிதாக யாருக்கும் அவர்களிடம் இருந்து தொற்றுநோய் பரவவில்லை என்பது தெரிய வந்துள்ளது. 74 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

கொரோனா நோயாளி

கொரோனா நோயாளி

இந்த கண்டுபிடிப்புகள் சிங்கப்பூர் நாட்டின் கொரோனா நோயாளி டிஸ்சார்ஜ் கொள்கையில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். தற்போது சிங்கப்பூரில் டிஸ்சார்ஜ் அளவுகோல்கள் என்பது தொற்றுநோய் இல்லை என்று மருத்துவ பரிசோதனையில் உறுதியாக வேண்டும். அப்படி வந்தால்மட்டுமே ஒருவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்.

மாறப்போகும் கொள்கை

மாறப்போகும் கொள்கை

இந்நிலையில் விரைவில் புதிய கொள்கை அறிவிக்கப்படும் என தெரிகிறது. கொரோனா நோயாளிகளை நிர்வகிப்பதில் சிங்கப்பூரின் யுக்திகள் சமீபத்திய உள்ளூர் மற்றும் சர்வதேச மருத்துவ அறிவியல் ஆய்வுகள் மூலம் வழிநடத்தப்படுகிறது, மேலும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் அறிக்கையின்படி, சமீபத்திய சான்றுகளை அதன் நோயாளி மருத்துவ மேலாண்மை திட்டத்தில் இணைக்க முடியுமா என்று சுகாதார அமைச்சகம் மதிப்பீடு செய்யக்கூடும்.

இன்று மட்டும் 344 பேருக்கு

இன்று மட்டும் 344 பேருக்கு

இதுவரை, சிங்கப்பூரில் மொத்தம் 31,960 கொரோனா நோயாளிகளில் 14,876 பேர் மருத்துவமனைகள் மற்றும் சமூக வசதிகளிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். சிங்கப்பூரில் திங்கள்கிழமை நண்பகல் வரை 344 புதிய கொரோனா தொற்று பதிவாகியுள்ளன.

English summary
Singapore study report, Covid-19 patients are no longer infectious after 11 days of getting sick even though some may still test positive
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X