சிங்கப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பு.. ஆன்டிபாடிகளுடன் பிறந்த குழந்தை.. மருத்துவர்கள் ஆச்சரியம்

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: கர்ப்ப காலத்தின்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 31 வயது பெண்ணுக்கு வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகளுடன் குழந்தை பிறந்துள்ளது.

சிங்கப்பூரில் கொரோனாவால் 58,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 29 பேர் பலியாகிவிட்டனர். 58,124 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இந்த நிலையில் சிலின் சான் என்பவர் கடந்த மார்ச் மாதம் ஐரோப்பாவிலிருந்து சிங்கப்பூர் திரும்பினார். அப்போது அவர் 10 வார கருவை சுமந்து கொண்டிருந்தார்.

Singapore woman gives birth to a baby with antibodies as she was covid 19

இந்த நிலையில் அவர் மூலம் குழந்தைக்கும் கொரோனா பரவல் ஏற்படலாம் என மருத்துவர்கள் அச்சமடைந்தனர். இந்த நிலையில் சிலினுக்கு கடந்த நவம்பர் 7-ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.

இதையடுத்து குழந்தை தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பதையும் அதற்கு பதிலாக குழந்தைக்கு ஏராளமான ஆன்டிபாடிகள் அதாவது வைரஸை எதிர்கொள்ளும் திறன் கொண்ட சக்தி உருவாகியுள்ளது.

அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி 100 சதவீதம் பலன் தருகிறது.. ஆய்வில் தகவல்அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி 100 சதவீதம் பலன் தருகிறது.. ஆய்வில் தகவல்

இதுகுறித்து மருத்துவர் கூறுகையில் எனக்கு இருந்த கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி போய்விட்டது. ஆனால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிறையவுள்ளது. இது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.

அந்த குழந்தைக்கு புரதங்களின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உண்டானதா, இல்லை தாயிடம் இருந்து கிடைத்ததா இல்லை, குழந்தையே உருவாக்கியதா என தெரியவில்லை, மேலும் கொரோனா பாதிப்பு இருக்கும் பெண்ணுக்கு குழந்தை பிறந்தால் அந்த வைரஸ் தொற்றின் தாக்கம் குழந்தைக்கும் பாதிக்குமா இல்லையா என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை என்றனர்.

English summary
Singapore Woman gives birth to a baby with antibodies as she had corona positive during delivery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X