சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாம்பு கடிச்சா வாயை வச்சு உறிஞ்சாதீங்க.. 108 ஆம்புலன்ஸ் நர்ஸ் தரும் அட்வைஸ்!

Google Oneindia Tamil News

தேவகோட்டை: பாம்பு கடித்து விட்டால், கடித்த இடத்தில் வாயை வைத்து உறிஞ்சி ரத்தம் எடுப்பார்கள். ஆனால் அது தவறு என்று 108 ஆம்புலன்ஸ் செவிலியர் ஒருவர் அறிவுரை கூறியுள்ளார்.

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 108 வாகனம் செயல்பாடு தொடர்பாக நேரில் விளக்கப்பட்டது. ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

108 ambulance staffs train students on snake bite first aid

தேவகோட்டை 108 வாகன பொறுப்பாளர்கள் சரண்யா , மருதுபாண்டியன், சார்லஸ் ஆகியோர் முதலுதவி தொடர்பாக மாணவர்களிடம் பேசுகையில், 108 தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் இன்னும் அதிகம் போய் சேர வேண்டும்.மாணவர்களாகிய நீங்கள்தான் அதிகம் 108 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

108 என்ற எண்ணுக்கான தொலைபேசி தொடர்பு இலவசம்தான். இதன் கண்ட்ரோல் சென்னையில்தான் உள்ளது. அலைபேசி மூலம் தொடர்பு கொண்டதும் எந்த மாவட்டமாக எங்கே இருந்தாலும் 2 நிமிடத்தில் சேவை கிடைக்க வாய்ப்புள்ளது.

எல்லா விஷயத்துக்கும் போன் பண்ணலாம். தீக்காயம், பிரசவம், காய்ச்சல், பாம்பு கடித்தல் போன்ற அனைத்துக்குமே தொடர்பு கொள்ளலாம். பாம்பு கடித்தல் , தீக்காயம், காய்ச்சல், வலிப்பு, கீழே விழுதல் போன்ற விபத்துகளில் எவ்வாறு முதலுதவி செய்வது என்பதை நேரடி செயல் விளக்கம் மூலம் விளக்கினார்கள்.

மாணவர்கள் நதியா, ஜனஸ்ரீ, அய்யப்பன், அஜய்பிரகாஷ், சிரேகா ஆகியோரின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். நிறைவாக ஆசிரியை முத்தமீனாள் நன்றி கூறினார்.

English summary
108 Ambulance staffs gave an useful first aid tips to School students in Devakottai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X