"ம்மா.. அந்த ஆண்ட்டி என்னை".. கதறிய பிஞ்சு.. 13 வயது சிறுவனிடம்.. 35 வயது பெண் செய்த காரியம்..!
சிவகங்கை: 13 வயது சிறுவனை டார்ச்சர் செய்த 35 வயது பெண்ணுக்கு சிவகங்கை கோர்ட்டில் அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நாளுக்கு நாள் பாலியல் குற்றங்கள் பெருகி வருகின்றன.. வடமாநிலங்களில் மட்டுமே அதிகளவு வன்முறை சம்பவங்கள் நடந்து வந்த நிலையில், தமிழகத்திலும் நடந்து கொண்டிருக்கின்றன.
எவ்வளவுதான் காவல்துறை விழிப்புடன் இருந்தாலும், பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் தீவிரமான நடவடிக்கையை கையில் எடுத்தாலும், குற்றங்கள் குறையாமலேயே உள்ளன.
ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல்! அம்பேத்கர் பிறந்தநாளில் வேற லெவல் சம்பவம்! திணறிய காவல்துறை!

பாலியல் தொல்லை
இத்தனைக்கும் போக்சோ சட்டம் அமலில்தான் உள்ளது.. வன்புணர்ச்சியில் ஈடுபடுதல், பாலியல் வன்கொடுமை, துன்புறுத்துதல், மிரட்டி அவமதித்தல் இப்படி பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தும் வருகிறது.. பாலியல் தொல்லையில் இருந்து பெண்களை காப்பதற்காக கொண்டு வரப்பட்டதுதான் போக்சோ சட்டம்.. ஆனால் பெண்களே போக்சோவில் கைதாவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..

டீச்சர் கைது
ஆண்களின் பாலியல் குற்றங்கள் வெளிப்படையாகவும், உடனடியாகவும் வெளியே தெரிகிறதே தவிர, சில பெண்களின் இதுபோன்ற செயல்கள் வெளியே வருவதேயில்லை.. கடந்த மாதம் இப்படித்தான், திருச்சியில் ஒரு டீச்சர் கைதானார்.. இப்போது இன்னொரு பெண்ணுக்கு தண்டனையையே தந்துள்ளது நீதிமன்றம்... இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது..

செக்ஸ் டார்ச்சர்
சிவகங்கை மாவட்டம் கீழசெவல்பட்டி அருகே உள்ள ஆவனி பட்டி கிராமத்தை சேர்ந்தவர் உதய வள்ளி.. 35 வயதாகிறது.. இவர் வீட்டுக்கு பக்கத்திலயே 13 வயது சிறுவன் வசித்து வருகிறான்.. கடந்த சில மாதங்களாகவே 35 வயதான உதய வள்ளி, அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது... உதயவள்ளி ஆண்ட்டி தன்னிடம் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார் என்று அந்த சிறுவன் தன் பெற்றோரிடம் சொல்லி உள்ளான்.. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், உடனடியாக போலீஸில் புகார் தந்தனர்.

உதயவள்ளி
அது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அது குறித்து உதவள்ளியிடம் விசாரணை நடத்தியபோது, அவர் சரியாக பதில் சொல்லவில்லை.. முன்னுக்குப்பின் முரணாக பதில் தந்தார்.. இறுதியில் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.. இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை ஜெயிலிலும் அடைத்தனர்.. இந்த வழக்குதான், சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

ஆண்ட்டி
அதில் உதய வள்ளி மீதான குற்றம் உறுதியான நிலையில், அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.. பொதுவாக பெண்கள் போக்சோவில் கைதாவதே அதிர்ச்சியை தந்து வரும் நிலையில், 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 35 வயது பெண்ணுக்கு சிறை தண்டனையே கிடைத்துள்ளது, அதைவிட அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.