சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

TNPSC: வயசு 46.. ஆடு மேய்ப்பவர்.. எப்படி திருவராஜ் இப்படி பாஸ் பண்ணீங்க.. அதிர்ச்சியில் சிபிசிஐடி

குரூப் 4 தேர்வில் 46 வயது நபர் முதலிடம் பிடித்துள்ளார்

Google Oneindia Tamil News

சிவகங்கை: இதோ இருக்காரே.. இவருக்கு வயசு 46.. ஆடு மேய்ப்பவர்.. ஆனால் குரூப் 4 தேர்வில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.. எப்படி முதலிடத்தை அதேபோல சிபிசிஐடியின் பிடியிலும் முதலாவதாக சிக்கி உள்ளார்!

சில தினங்களாகவே டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு சம்பந்தமான விவகாரம் வெடித்து வருகிறது.. ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய 39 பேர் முதல் 100 இடங்களுக்குள் வந்ததுதான் பெருத்த சர்ச்சையானது. இவர்கள் எப்படி இவ்வளவு மார்க் எடுத்தார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டு, சிபிசிஐடி விசாரணையும் நடந்து வருகிறது.

இதில் முதல் ஆளாக சிக்கியவர் திருவராஜ் என்பவர்தான்.. சிவங்கை மாவட்டம் பெரிய கண்ணனூரை சேர்ந்தவர்.. குரூப்-4 தேர்வில் மாநிலத்திலேயே முதல் இடத்தை பிடித்துள்ளார்.. இவரது மார்க் வைத்துதான் இந்த விவகாரமே!!

ஆட்டுக்கிடைகள்

ஆட்டுக்கிடைகள்

திருவராஜ்-க்கு கல்யாணமாகி 3 மகள்கள் உள்ளனர்.. இவர் ஒரு விவசாயி.. தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்பவர்.. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நிறைய ஆட்டுக்கிடைகள் வைத்திருந்ததாகவும் சொல்கிறார்கள். இவருக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு மேல் ஒரு ஆசை போல தெரிகிறது.. மொத்தம் 7 முறை இந்ததேர்வை எழுதியுள்ளார்.. 7 முறையுமே ஃபெயில் ஆகிவிட்டார்.. அப்படிப்பட்ட திருவராஜ், இந்த முறை பாஸ் ஆகியிருந்தால் கூட பரவாயில்லை.. மாநிலத்திலேயே முதல் இடம் என்பதுதான் பெருத்த சந்தேகத்தை எழுப்பியது.

46 வயது

46 வயது

இந்த தேர்வு எழுத எந்த பயிற்சி மையத்திலும் ரொம்ப காலம் சேர்ந்து படிக்கவும் இல்லை.. அதுவும் நீண்ட காலம் பயிற்சியும் எடுக்கவில்லை.. வயசும் 46 என்று கூறப்படுகிறது. சிவகங்கையை சேர்ந்த இவர் 7 முறையுமே அங்குதான் தேர்வு எழுதியிருக்கிறார்.. ஆனால் இந்த முறை மட்டும் ராமேசுவரத்தில் எழுதி இருக்கிறார்... ரிசல்ட் பார்க்க சிவகங்கை இ-சேவை மையத்திற்கும் சென்றிருக்கிறார்.

உன் வேலையை பார்

உன் வேலையை பார்

அங்கு போய் எப்படி ரிசல்ட் பார்ப்பது என்றுகூட தெரியாமல், பணியில் இருந்த ஒரு பெண்ணிடம் தன்னுடைய மார்க் எவ்வளவு என்று பார்த்து சொல்லுங்கள் என்று கேட்டாராம்.. அப்போதுதான், அவர் பிறந்த தேதி சமாச்சாரம் வெளியே வந்துள்ளது.. 46 வயசில எப்படி உங்களை தேர்வு எழுத அனுமதிச்சாங்க என்று அந்த பெண் கேட்டாராம். அதற்கு "உன் வேலையை பார்.. அது உனக்கு தேவையில்லாதது என்றாராம் திருவராஜ்.. அந்த பெண் மார்க், வயது விவரங்களை பகிரபோய்தான் எல்லாருக்கும் விஷயம் தெரிந்து வெடித்துள்ளது.

பகீர் தகவல்கள்

பகீர் தகவல்கள்

இது சம்பந்தமாகதான் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.. திருவராஜ்-க்கு புரோக்கர் யாராவது உதவினார்களா? என்று விசாரித்து வருகின்றனர்.. ஆனால் தான் ஒரு நிபராதி என்று டிஎன்பிஎஸ்சி ஆபீசில் ஆஜராகி விளக்கம் தருவேன் என்கிறாராம் திருவராஜ்! இப்போது குரூப் 4 தேர்வு சம்பந்தமான விசாரணை சூடு பிடித்து வருகிறது.. விரைவில் பல பகீர் தகவல்களும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது!

English summary
46 year old shepherd worker got first place in Group 4 exam and cpcid police inquiry is going on it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X