சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவே அண்டாது.. வெட்டிவேர், வேப்பிலை, துளசி கலந்த மூலிகை ஏர்கூலர் வடிவமைத்த சிவகங்கை இளைஞர்

Google Oneindia Tamil News

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றுகளை தடுக்கும் விதத்தில் சுற்றுச்சூழல் ஆய்வாளர் ஒருவர் மூலிகை கலந்த ஏர்கூலரை வடிவமைத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியது. தமிழகத்திலும் ஒன்றரை லட்சத்தை தாண்டியது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க மாஸ்க் அணிதல் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தேவையின்றி வெளியே செல்லாமல் இருத்தல் உள்ளிட்டவற்றை மக்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் மூலிகை ஏர்கூலரை வடிவமைத்துள்ளார். பொதுவாக தொற்றுநோய்கள் காற்று மூலம் பரவுவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் காற்றை சுத்தப்படுத்தும் வகையில் புதிய வடிவமைப்பை செய்துள்ளது. யார் அவர், என்ன மாதிரியான வடிவமைப்பு அவருடையது என்பதை பார்ப்போம்.

மாமா

மாமா

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி முத்து குமரேசன். இவருடைய மகன் மதுரைசெல்வன். இவர் கனடா நாட்டில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளராக இருந்து வந்தார். தற்போது காரைக்குடி சிக்ரியில் பணியாற்றி வரும் தனது மாமாவும், விஞ்ஞானியான பழனியப்பன் என்பவரின் ஆலோசனையின் பேரில் மூலிகை மூலம் இயங்கும் ஏர்கூலர் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

சிறிய மண்சட்டி

சிறிய மண்சட்டி

இதுகுறித்து மதுரை செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்த ஏர் ரூலரை வீடுகளில் பயன்படுத்தப்படும் ஃபேன், மண்பானையை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. பானையின் பக்கவாட்டில் வட்ட வடிவிலான துளையை ஏற்படுத்தி அதன் மேல் பகுதியில் சிறிய மண் சட்டியை வைக்க வேண்டும்.

குளு குளு காற்று

குளு குளு காற்று

வெட்டிவேர், துளசி, வேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த சாற்றில் அரை லிட்டர் அளவை எடுத்து 3 லிட்டர் தண்ணீரில் சேர்த்து மண்பானையில் ஊற்றிவிட வேண்டும். பின்னர் மின்விசிறியை இயக்கினால் குளுமையான காற்று வரும்.

ஏர்கூலர்

ஏர்கூலர்

இந்த காற்று நம் உடலில் படும்போது கிருமிதொற்றுகளின் பாதிப்பு தடுக்கப்படும். இதில் வேப்பிலை, மஞ்சள்தூள் உள்ளிட்ட கிருமிநாசினிகள் இருப்பதால் கொரோனா கூட நம்மை அண்டாது. இவற்றை தயாரிப்பது மிகவும் எளிது. தற்போதுள்ள நிலையில் இந்த ஏர்கூலரை தினமும் 8 மணிநேரம் பயன்படுத்தலாம். இரு நாட்களுக்கு ஒரு முறை மூலிகை நீரை மாற்றிக் கொள்ளலாம் என்றார்.

English summary
Environmentalist designed a herbal Air cooler usig fan, pots at Devakottai in Sivagangai district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X