சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

200 பேர் புடைசூழ வந்த எச்.ராஜா.. தேர்தல் விதிகளை மீறிவிட்டார்.. பாய்ந்தது வழக்கு!

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பாஜக வேட்பாளர் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

சிவகங்கை: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பாஜக வேட்பாளர் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

லோக்சபா தேர்தலில் சிவகங்கையில் அதிமுக கூட்டணி சார்பாக பாஜக வேட்பாளர் தேசிய செயலாளர் எச்.ராஜா போட்டியிடுகிறார். இதற்காக இவர் நேற்று வேட்புமனுதாக்கல் செய்தார்.

இவர் நேற்றில் இருந்து இங்கு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அதேபோல் நேற்று பாஜக வேட்பாளர்கள் பலர் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திக் திக் 2 to 3 ! கடைசி நேரத்தில் சீரிப்பாய்ந்த அமமுக வேட்பாளர்கள்.. வெற்றிகரமாக வேட்பு மனு தாக்கல் திக் திக் 2 to 3 ! கடைசி நேரத்தில் சீரிப்பாய்ந்த அமமுக வேட்பாளர்கள்.. வெற்றிகரமாக வேட்பு மனு தாக்கல்

வழக்கு பதிவு

வழக்கு பதிவு

இந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வேட்புமனுத்தாக்கல் செய்ய எச்.ராஜா வந்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து விரைவில் விசாரிக்கப்படும்.

சில விதிகள்

சில விதிகள்

பொதுவாக தேர்தல் ஆணையம் தேர்தல் பிரச்சாரங்களின் போது நிறைய விதிகளை அறிவிக்கும். அதேபோல் வேட்புமனு தாக்கல் செய்யும் போதும் கூட, சில முக்கியமான விதிகளை தேர்தல் ஆணையம் கடைபிடிக்கும். அதில் முக்கியமானது வேட்புமனு தாக்கல் செய்ய குறைவான கூட்டத்துடன் வர வேண்டும்.

என்ன விதி

என்ன விதி

தேர்தல் அலுவலகத்திற்கு சில மீட்டர்கள் தூரத்தில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் நிற்க வேண்டும். அதன்பின் வேட்பாளர்கள், உதவியாளர்கள் மட்டுமே உள்ளே வர வேண்டும் என்று விதி இருக்கிறது. ஆனால் இதை மீறி எச்.ராஜா 200 பேரை அலுவலகம் வரை கொண்டு வந்து இருக்கிறார்.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

இவர்களும் அமைதியாக வராமல் தாரைதப்பட்டைகளுடன் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் பாஜக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் தற்போது எச்.ராஜா மீது தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு போடப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Case filed against BJP candidate H Raja for violating election rules while nominations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X