என்ன கொடுமை.. ஒரே செகண்ட்தான்.. பெண்ணின் மீது ஏறி இறங்கிய பஸ்.. பறிபோன 23 வயசு.. பதற வைக்கும் வீடியோ
சிவகங்கை: இருசக்கர வாகனம் மீது அரசு பஸ் மோதியதில், இளம் பெண் உடல் நசுங்கி உயிரிழந்தார்.. இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் ரஞ்சனி.. 23 வயதாகிறது.. இவர் ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் உள்ள தனியார் வங்கியில் கேஷியராக வேலை பார்த்து வந்தார்.
அடுத்த 5 வருஷத்துக்கு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்: உபி.யில் அதிரடியாக அறிவித்த அமித்ஷா
இதற்காக, ராமநாதபுரத்திலேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்... இந்நிலையில், இன்று காலை ராமநாதபுரம் தேவிபட்டினம் நெடுஞ்சாலையில் வங்கிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

ரஞ்சனி
அண்ணா சிலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது, சாலையில் மண் நிரம்பிய வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது.. அதற்கு பக்கத்தில் ரஞ்சனி சென்று கொண்டிருந்தார்.. அந்த மண் லோடு வாகனம் நிலைதடுமாறி, ரஞ்சினி மீது மோதியது.. இதனால் ரஞ்சனி வலது பக்கத்தில் கீழே விழுந்துவிட்டார்.. அந்த நேரம் பார்த்து, திருச்சியில் இருந்து வந்த அரசு பஸ் ரஞ்சனி மீது ஏறிவிட்டது.. அந்த பஸ்ஸின் சக்கரம், தரையில் இருந்த ரஞ்சனியின் தலையில் ஏறி இறங்கியது..

தலை நசுங்கியது
இதில் தலை நசுங்கி அங்கேயே உயிரிழந்தார் ரஞ்சனி.. கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது. அந்த விபத்து சம்பவம் குறித்து கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரஞ்சனியின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. ரஞ்சனியின் அப்பா மும்பையில் பைனான்ஸ் செய்து வருகிறார்.. ரஞ்சனி ஒரு பைக் ரேஸராம்..

கூலிங்கிளாஸ்
எல்லா வகையான பைக்கையும் சூப்பராக ஓட்டுவாராம்.. விபத்து நடந்த இடத்தில் உள்ள கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்த நிலையில், அந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர். அதில், ஷர்ட் - பேண்ட் - கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டு ரஞ்சனி பைக்கில் வந்து கொண்டிருக்கிறார்.. ஹெல்மெட்டும் அணிந்துள்ளார்.. சாலையில் அவ்வளவாக வாகனங்கள் காணப்படவில்லை.. பைக்குகள்தான் போய் கொண்டிருக்கின்றன..

சிசிடிவி காட்சி
ரஞ்சனி கீழே நிலைகுலைந்து விழும்போது, அரசு பஸ் வேகமாக வந்து மோதுவது அதில் பதிவாகி உள்ளது.. டிராபிக் ஜாம் ஏற்படும் அளவுக்கு வாகனங்கள் இல்லாததால்தான், அரசு பஸ் வேகமாக வந்ததாக தெரிகிறது.. பட்டப்பகலில் நடந்த விபத்து என்பதால், அங்கிருந்த பொதுமக்கள் பதறியடித்து கொண்டு ஓடிவருகின்றனர்.. கண்ணெதிரே இளம்பெண்ணின் உடம்பின் மீது அரசு பஸ் ஏறி இறங்குவதும், தலைநசுங்கி உயிரிழந்ததும் இந்த வீடியோவில் பதிவாகி பதைபதைக்க வைத்து வருகிறது.. உயிரிழந்த ரஞ்சனிக்கு உடன்பிறந்த சகோதரர் ஒருவர் இருக்கிறாராம்.. இந்த கோர விபத்து தொடர்பான விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது..!