சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கார்த்தி சிதம்பரத்துக்கு ஆரத்தி எடுத்ததற்கு குறைவான பணம்.. பங்கிட்டு கொள்வதில் பெண்களிடையே சண்டை!

Google Oneindia Tamil News

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திற்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு தலா 32 ரூபாய் மட்டுமே கிடைத்ததால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

பொதுவாக ஒருவருக்கு ஆரத்தி எடுத்தால் பணம் கொடுப்பது வழக்கம். அதிலும் வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்களுக்கு பெண்கள் ஆரத்தி எடுப்பதும் அதற்கு வேட்பாளர் பணம் கொடுப்பதும் வாடிக்கையாகும்.

இந்த வாடிக்கையான சம்பவங்கள் சில நேரங்களில் வேடிக்கையாவது இயல்பானதாகும். அதுபோல் சிவகங்கையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பாரத பிரதமர் அப்துல் கலாம்.. இல்லை இல்லை பாரத பிரதமர் மோடி.. கன்பியூஸ் ஆன அமைச்சர் சரோஜா!பாரத பிரதமர் அப்துல் கலாம்.. இல்லை இல்லை பாரத பிரதமர் மோடி.. கன்பியூஸ் ஆன அமைச்சர் சரோஜா!

25 பெண்கள் ஆரத்தி

25 பெண்கள் ஆரத்தி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழ்ப்பசளை கிராமத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது 25 பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

தகராறு

தகராறு

இதையடுத்து அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் ரூ. 800-ஐ அளித்தனர். மொத்தம் 25 பெண்களுக்கும் சேர்த்து ரூ. 800 அளிக்கப்பட்டதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அப்படிப் பார்த்தால் ஒருவருக்கு 32 ரூபாய் வரும். அதை வைத்து கொண்டு என்ன செய்ய முடியும் என தகராறில் ஈடுபட்டனர்.

கோபம்

கோபம்

இதனால் கார்த்தி சிதம்பரத்துக்கு தர்ம சங்கடத்தில் நெளிந்தார். பின்னர் கோபமடைந்த கார்த்தி, உங்கள் சண்டையை அப்புறம் வைத்து கொள்ளுங்கள். முதலில் நான் சொல்வதை கேளுங்கள் என கூறினார்.

அறிவிப்பு

அறிவிப்பு

இதையடுத்து பெண்கள் அமைதியாகினர். பின்னர் கார்த்தி சிதம்பரம் கூறுகையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதம் 6 ஆயிரம் வழங்கப்படும் எனவும், விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்றார்.

English summary
Ladies created ruckus for money distributed for Arathi in Karti Chidambaram's election campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X