சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிவகங்கை.. ஊருக்குள் வந்த மான்கூட்டம்.. வேகமாக சேஸ் செய்த நாய்கள்.. கடைசியில் எதிர்பாராத திருப்பம்!

Google Oneindia Tamil News

சிவகங்கை: சிவகங்கையில் ஊருக்குள் வந்த மான் குட்டி ஒன்றை நாய்கள் கூட்டமாக துரத்தி சென்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் அருகில் இருக்கும் வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி மான்கள், நரிகள் வருவது உண்டு . அதிலும் தண்ணீர் குடிப்பதற்காக மான்கள் அதிகம் வரும்.

உள்ளே இருக்கும் காட்டு பகுதியில் தண்ணீர் இல்லாத சமயங்களில் பல கிலோ மீட்டர் கடந்து வந்து மான்கள் இங்கே தண்ணீர் குடிப்பது வழக்கம். இதற்காக நெடுஞ்சாலைகளை கடந்தும் கூட மான்கள் வருவது வழக்கம்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த நிலையில் சிவகங்கையில் ஊருக்குள் வந்த மான் குட்டி ஒன்றை நாய்கள் கூட்டமாக துரத்தி சென்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கையில் இருக்கும் திருப்பத்தூர் அருகே உள்ள தம்பிபட்டி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு 6க்கும் அதிகமான மான் குட்டிகள் கூட்டமாக வந்து இருக்கிறது. தண்ணீர் குடிப்பதற்காக மான்கள் வந்துள்ளது.

தண்ணீர் குடிப்பது

தண்ணீர் குடிப்பது

இந்த மான்களை பார்த்ததும் அங்கிருந்த வெறிநாய்கள் கூட்டம் அந்த மான்களை சுற்றி வளைத்தது. பொதுவாக மான்கள் நாய்களை விட வேகமாக ஓடும். இதனால் அந்த வெறி நாய்களை பார்த்ததும் மான்கள் வேகமாக ஓட்டம் எடுக்க தொடங்கியது. திக்கு தெரியாமல் காட்டு பகுதியை நோக்கி ஓடியது.

மக்கள் பார்த்தனர்

மக்கள் பார்த்தனர்

இந்த சத்தம் கேட்டதும் அங்கே மக்கள் கூடினார்கள். நாய்கள் எல்லாம் சேர்ந்து மான் கூட்டத்தை துரத்துவதை பார்த்தனர். நிறைய மான்கள் வந்து இருந்த நிலையில், பெரிய மான் எல்லாம் நாய்களிடம் இருந்து தப்பித்து சென்றுவிட்டது. ஆனால் ஒரு மான் குட்டி மட்டும் நாய்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

துரத்தி கொன்றது

துரத்தி கொன்றது

நாய்களின் வேகத்திற்கு ஓட முடியாத மான், ஒரு நாயிடம் சிக்கியது. வசமாக சிக்கிய மானை, மற்ற நாய்கள் எல்லாம் சேர்ந்து கடித்து கொன்றுள்ளது. மக்கள் முன்னிலையில் அந்த மான் நாய்களிடம் கடிபட்டது. பொதுவாக மான்கள் புலிகளிடம் கூட அவ்வளவு எளிதாக சிக்காது. ஆனால் இந்த மான் நாய்களிடம் சிக்கிக் கொண்டது.

பலியானது

பலியானது

இதில் சம்பவ இடத்திலேயே அந்த மான் பலியானது. பின் அதன் உடலை நாய்கள் எடுத்து சென்று தெருமுனையில் போட்டு இருக்கிறது. இதை அடுத்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் மானின் உடலை மீட்டனர். பின் அதற்கு பிரேத பரிசோதனை செய்துவிட்டு உடலை அடக்கம் செய்தனர்.

English summary
Deer chases by group of dogs in Sivangangai and a small deer dies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X