சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகிழ்ச்சிகரமான சுதந்திர தினம்.. சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய்.. அசத்தல் பள்ளி!

By Staff
Google Oneindia Tamil News

தேவகோட்டை: 73வது சுதந்திர தினத்தையொட்டி தேவகோட்டைசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழாவில் மாணவர்களுக்கு சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் வழங்கப்பட்டது.

சுதந்திர தின விழாவுக்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உதயசூரியன் கொடி ஏற்றி பேசினார். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சாக்லேட் தவிர்த்து கடலை மிட்டாய் இனிப்பு வழங்கப்பட்டது.

Devakottai school celebrates Independence day in difference

இப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களின் பிறந்த நாள்களுக்கு அவர்களே சாக்லேட் தவிர்த்து கடலை அச்சு மிட்டாய் இனிப்பாக வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.

Devakottai school celebrates Independence day in difference

முன்னதாக ஒற்றுமையை வலியுறுத்தி நாம் அனைவரும் இந்திய தாயின் மக்கள் என்கிற தலைப்பில் மழலை மாணவர்களின் மௌன நாடகமும், சுதந்திர தினம் தொடர்பாக கவிதையை மெர்சியும், யோகேஸ்வரனும் ஆங்கிலத்தில் சுதந்திர தினம் தொடர்பாக திவ்யஸ்ரீயும், தேசபக்தி பாடலுக்கான மழலையர் நடனமும், எழுந்திரு தேசமே பாடலும் பாடினார்கள்.

Devakottai school celebrates Independence day in difference

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Devakottai school celebrates Independence day in difference
English summary
Devakottai Chairman Manickavasagam middle school celebrated Independence day in difference.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X