சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எவ்வளவு பேசினார்.. எங்க இப்போ பேச சொல்லுங்க எச்.ராஜாவை.. கரு பழனியப்பன் சவால்

Google Oneindia Tamil News

சிவகங்கை: "எவ்ளோ பேசினார் எச்.ராஜா.. இப்போ பெரியாரை பத்தி பேச சொல்லுங்க பார்ப்போம்? பிரச்சாரங்களில் பெரியாரை எதிர்த்து பேசாதது ஏன்?" என இயக்குநர் கரு. பழனியப்பன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து கரு. பழனியப்பன் பிரச்சாரம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது சொன்னதாவது:

Director Karu Palaniappan slams H Raja in Sivagangai

8 வழிச் சாலை தீர்ப்பில் அதிமுகவில் இருவேறு கருத்துகள் உள்ளன. நீங்க வேணும்னா பாருங்க.. கண்டிப்பாக மேல்முறையீட்டுக்கு செல்வார்கள்.

காங்கிரஸ் கட்சியிடம் நீங்கள் ஒரு விஷயத்தை சொல்லலாம், கேள்வி கேட்கலாம். ஆனால் பாரதீய ஜனதாவிடம் நீங்கள் கேள்வியே கேட்க முடியாது. தேர்தலுக்கு முன்னாடி பேசறதைதான் தேர்தலுக்கு அப்பறமும் நாம் பேசறோம். ஆனால் எச்.ராஜா பெரியாரை பத்தி இப்போபேச சொல்லுங்க பார்ப்போம்..

ஈவேராதான் இந்த நாட்டின் கெடுன்னு சொன்னார் இல்லையா? இப்போ தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லட்டும். பிரச்சாரத்தில் மட்டும் ஏன் வேற முகத்தோடு இருக்கணும், ரெண்டு முகம் இருக்கு. தேர்தலுக்கு முன் ஒரு முகம். தேர்தலுக்கு பின் ஒரு முகம். நல்லவங்களா உங்களை காட்டிக்க முயற்சி பண்றீங்களே? உங்க கருத்துல உறுதியா இருந்தால் பிரச்சாரத்திலும் அதை சொல்லலாமே?

ராமதாஸுக்கு அன்புமணி வெற்றி மட்டுமே முக்கியம்.. பாமக வேட்பாளர்கள் குறித்து கவலையில்லை.. மணிகண்டன் ராமதாஸுக்கு அன்புமணி வெற்றி மட்டுமே முக்கியம்.. பாமக வேட்பாளர்கள் குறித்து கவலையில்லை.. மணிகண்டன்

பிரச்சாரத்தில் மு.க. ஸ்டாலின் தரம் தாழ்ந்து பேசவில்லை. தமிழக முதல்வர்தான் ஒருமையில் எல்லாரையும் பேசி வருகிறார். ஓய்வுபெற்ற நீதிபதிகளை ஆளுநராக நியமித்தால், அவர்களது முந்தைய தீர்ப்புகள் விமர்சனத்துக்கு உள்ளாகும். இது நாட்டுக்குக் கேடு" என்றார்.

English summary
Director Karu Palaniappan campaigned in Sivagangai for Karthi Chidambaram and he slams BJP candidate H Raja
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X