சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்கலாமா?... முதலமைச்சர் பழனிசாமி கொந்தளிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    ஹெச். ராஜாவுக்கு முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம்- வீடியோ

    சிவகங்கை: திமுக - காங்கிரஸ் ஒரு சுயநல கூட்டணி என்றும், அந்த கூட்டணியால் எந்த பயனுமில்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.

    சிவகங்கையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் ஹெச். ராஜாவுக்கு ஆதரவாக முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்போது பேசிய அவர், ஹெச். ராஜா திறமையானவர் என்றும், தமிழகத்திற்கு அதிக அளவு நிதி ஒதுக்கியது மோடி அரசு தான் என்றும் குறிப்பிட்டார்.

    சிதம்பரம் என்ன செய்தார்?

    சிதம்பரம் என்ன செய்தார்?

    தமிழக மின்வெட்டு இல்லாமல் மின் மிகை மாநிலமாக உள்ளதால் பல்வேறு தொழிற்சாலைகள் இங்கு வந்துள்ளதாகவும், இதனால் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரத்தின் போது கூறினார். மேலும்,ப.சிதம்பரம் பலமுறை எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டும், நிதி அமைச்சராக இருந்தும் தொகுதிக்கும், தமிழகத்திற்கும் ஒன்றுமே செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

    அனிதா ஞாபகம் இருக்கா.. ஜெ. எப்படி இறந்தார்னு தெரியுமா.. இவங்களுக்கு தண்டனை வேணாமா.. உதயநிதி கேள்விஅனிதா ஞாபகம் இருக்கா.. ஜெ. எப்படி இறந்தார்னு தெரியுமா.. இவங்களுக்கு தண்டனை வேணாமா.. உதயநிதி கேள்வி

    மீண்டும் மோடி வேண்டும்

    மீண்டும் மோடி வேண்டும்

    நாடு பாதுகாப்பாக உள்ளதாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர் பழனிசாமி, தகுதி வாய்ந்த நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வர ஹெச். ராஜாவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    எங்கும் இல்லாத சாலை வசதி

    எங்கும் இல்லாத சாலை வசதி

    அதேநேரம், மத்திய அரசு தெரிவித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், நாட்டில் எங்கும் இல்லாத சாலை கட்டமைப்பு வசதிகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

    சட்டம், ஒழுங்கு சிறப்பு

    சட்டம், ஒழுங்கு சிறப்பு

    ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்கலாமா? என்று கேள்வி எழுப்பிய முதலமைச்சர் பழனிசாமி, சட்ட ஒழுங்கை சிறப்பாக பேணிக் காப்பது தமிழகம் தான் என்று கூறினார். ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது என்றும் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.

    English summary
    Chief Edappadi Palanichany Said that DMK - Congress as a selfish alliance, but the alliance has no beneficial
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X