சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யாரும் அவசரப்பட்டு விவசாய கடன்களை கட்டிடாதீங்க... 2 மாசம் பொறுங்க... கார்த்தி சிதம்பரம்

Google Oneindia Tamil News

சிவகங்ககை: அவசரப்பட்டு விவசாய கடன்களை யாரும் கட்டிவிட வேண்டாம் என சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்களவை தேர்தல் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. அனைத்து கட்சிகளுமே தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.
கடந்த செவ்வாய்கிழமை காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்யப்போவதாக அறிவித்தது மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.

Do not pay the agricultural loan: says karti chidambaram

இந்நிலையில் பொன்அமராவதியில் கார்த்தி சிதம்பரம் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "ஜிஎஸ்டி வரியை மக்கள் தலைமையில் சுமத்தி பாதிப்படைய வைத்துள்ளது மோடி அரசு. எனவே இதில் இருந்து மீண்டு வர நீங்கள்(மக்கள்) எங்களுக்கு (காங்கிரஸ்) ஓட்டு போடுங்கள்.

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால்,. 2008ம் ஆண்டு விவசயாக் கடன் ரத்து செய்யப்பட்டது போல், இப்போதும் அனைத்து விவசாயக்கடனும் ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்படும். இந்த உறுதியை ராகுல் காந்தி தந்திருக்கிறார். ஸ்டாலின் உறுதி தந்திருக்கிறார். யாராவது விவசாயக் கடன் வைத்திருந்தால், கட்டிவிட வேண்டாம். இரண்டு மாதம் காத்திருங்கள்" இவ்வாறு கூறியுள்ளார்.

நோட்ஸ் எடுங்கப்பா.. கார்த்தி சிதம்பரத்திற்கு இப்படி ஒரு திறமையா? சீரியலை வைத்து சீரியஸ் பிரச்சாரம்! நோட்ஸ் எடுங்கப்பா.. கார்த்தி சிதம்பரத்திற்கு இப்படி ஒரு திறமையா? சீரியலை வைத்து சீரியஸ் பிரச்சாரம்!

காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயக் கடன் தள்ளுபடியை கூறித்தான் ஆட்சியை பிடித்தது. எனவே இதே டெக்னிக்கை மத்தியில் ஆட்சிக்கு வரவும் காங்கிரஸ் பயன்படுத்த தொடங்கி உள்ளது. இதனிடையே விவசாய கடனை ரத்து செய்யப்போவதால், யாரும் கடனை கட்ட வேண்டாம் என முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகனே கூறியிருப்பது விமர்சனத்தையும் உருவாக்கி உள்ளது.

English summary
Do not pay the agricultural loan: says karti chidambaram sivaganga congress candidate karti chidambaram says Do not pay the agricultural loan, wait at least 2 month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X