சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குழந்தைகளுக்கு கழுதைப் பால் நல்லது... மோசடி எல்லாம் இல்லை... கதறும் விற்பனையாளர்கள்

Google Oneindia Tamil News

சிவகங்கை: குழந்தைகளுக்கு கழுதைப்பால் நல்லது. இதில் மோசடி எல்லாம் இல்லை என்று பால் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆட்டுப்பால் குடிச்சா அறிவு அழிஞ்சு போகுமுன்னு, எரும பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு சொல்லும் வேளையில், கழுதைப்பால் குடிச்சா நோய் குறைஞ்சு போகுமுன்னு கருதப்படுகிறது.

அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் கழுதைப் பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. 50 மில்லி, 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அழிந்து வரும் கழுதைகளைக் கொண்டு கடலூர் மாவட்டம் தொழுதூர் பகுதியைச் சேர்ந்த 5 குடும்பத்தினர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கழுதைப் பால் விற்பனை

கழுதைப் பால் விற்பனை

தற்போது, 12 கழுதைகளோடு சிவகங்கை மாவட்ட கிராம பகுதியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் இந்திராநகர், ஊத்திகுளம் கூத்தாண்டன், சாத்தரன்கோட்டை, செங்குளம் உள்ளிட்ட சிவகங்கை சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு சென்று 50 ரூபாய்க்கு கழுதைப் பாலை விற்பனை செய்து வருகின்றனர். நோய்தொற்று தடுக்கவும், ஆரோக்கியம் கிடைக்கவும் கழுதைப் பால் உதவும் என்ற நம்பிக்கையில் ஏராளமானோர் கழுதைப் பாலை வாங்கி குடித்து வருகின்றனர்.

வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்

வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்

இதுகுறித்து பேசிய கழுதைப் பால் விற்பனையாளர்கள் கூறுகையில், நாங்கள், தமிழகம் முழுவதும் சென்று, கழுதைப் பால் விற்று வருகிறோம். மேலும், கழுதைப் பால் மருத்துவ குணம் கொண்டது. வெறும் வயிற்றில், ஏழு நாட்கள் தொடர்ந்து குடித்தால் ஜீரண சக்தி, மஞ்சள் காமாலை ஆஸ்துமா நோய்கள் வராது. சிறிய குழந்தைகள் என்றால், ஒரு சங்கு போதும். பெரியவர்களுக்கு, 50 மில்லி கொடுக்க வேண்டும்.

50 ரூபாய்க்கு விற்பனை

50 ரூபாய்க்கு விற்பனை

50 மில்லி, 50 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறோம். நாங்கள், பால் விற்பனைக்காகவே கழுதை வளர்க்கிறோம். கழுதையை கிராமப் பகுதிகளுக்கு கொண்டு சென்று, கலப்படம் இல்லாமல், அங்கேயே கறந்து விற்கிறோம். மேலும், ஒரு பருவத்தில் மட்டும்தான் கழுதையிடம் இருந்து பால் கறக்க முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அமோக வரவேற்பு

அமோக வரவேற்பு

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்த தொழிலை செய்து வருகிறோம். செல்லும் ஊர்களில் எல்லாம் கழுதை பாலுக்கு அமோக வரவேற்பு உள்ளதோடு, அருந்தி மகிழவும் ஆட்கள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். உடலுக்கு ஆரோக்கியத்தை கழுதைப்பால் தரும். குழந்தைகளுக்கு இப்பால் நல்லது. இதில் மோசடி எல்லாம் இல்லை. கறந்தவுடன் அப்படியே சிறியவர்களுக்கு கொடுக்கும் வகையில் வழங்குகிறோம் என்றும் தெரிவித்தனர். கழுதைகளை பொதி சுமக்க வைக்காமல், பசுமாட்டைப் போல், பராமரித்து வருகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

இதுகுறித்து கிராமவாசிகள் கூறுகையில்: கழுதைப்பால் கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து குழந்தைகளுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கொடுக்கிறோம். ஆடு, மாடு என மற்ற பாலைப்போல் தான் இதுவும். ஆனால், இப்போது கழுதைகளை பார்ப்பது அரிதாக உள்ளது. எப்போதாவது குறைவாக கிடைக்கிறது. அதனால் சங்கு அளவு கொடுக்க வேண்டியுள்ளது என்றனர்.

மருத்துவர்கள் அறிவுரை

மருத்துவர்கள் அறிவுரை

கழுதைப் பால், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது, மருத்துவ குணம் கொண்டது என, சித்த மருத்துவ புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாள்பட்ட நோய்களை தீர்க்கும் என்பது நிரூபிக்கப் படவில்லை. குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர, வேறு எந்தப் பாலும் கொடுக்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

English summary
Auspicious Sales: Donkey milk is good for babies, there is no fraud
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X