சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிவகங்கை தொகுதியில் ரூ. 7, 000 கோடியில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் … ஹெச்.ராஜா பிரச்சாரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    சிவகங்கை குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் - ஹெச்.ராஜா

    சிவகங்கை: காவிரி- குண்டாறு திட்டமானது ஏழாயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டு, சிவகங்கை பாராளுமன்ற தொகுதி முழுவதும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில், நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், கட்சி வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம், தேசிய கட்சி தலைவர்களின், பார்வை தமிழகத்தின் பக்கம் திரும்பியுள்ளது.

    Drinking water problem will be solved in Rs.7, 000 crore, H.Raja Campaign

    அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளார். கிருஷ்ணகிரி, சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், மாலையில் தேனியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பிரதமர் மோடி நாளை தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

    இந்த நிலையில், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா காரைக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

    வேலையில்லாத் திண்டாட்டம்தான் மிகப் பெரிய தேர்தல் பிரச்சினை.. ரகுராம் ராஜன் வேலையில்லாத் திண்டாட்டம்தான் மிகப் பெரிய தேர்தல் பிரச்சினை.. ரகுராம் ராஜன்

    பிரதம மந்திரி திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரப்படும் என்றார். அதேபோல் காவிரி குண்டாறு திட்டமானது இணைக்கப்பட்டு ஏழாயிரம் கோடி ரூபாயில், சிவகங்கை பாராளுமன்ற முழுவதும் குடிநீர் தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார்.

    முன்னதாக, நாட்டரசன்கோட்டை மற்றும் சூரக்குளத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாயை தமிழக அரசு வழங்கிய போதும், அதனை நீதிமன்றம் சென்று ஸ்டாலின் தடுக்க முயற்சித்ததாகவும் குற்றம்சாட்டினார்.

    English summary
    H.Raja Said that Drinking water problem will be solved in Rs.7, 000 crore
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X