சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எங்ககிட்ட மட்டும் தான் கடமைய கரெக்டா செய்வீங்களா.? மின்வாரியத்தை வறுத்தெடுக்கும் மக்கள்

Google Oneindia Tamil News

சிவகங்கை: மக்கள் கரண்ட் பில் கட்டாம பாக்கி வச்சா அபராதமும் அதயும் கட்டலன்னா மொத்தமா ஃப்யூசயும் பிடிங்கிட்டு போற சின்சியர் மின்வாரியம், அரசு அலுவலகங்கள் கிட்ட மட்டும் தாராளமா கருணை காட்டுவது ஏன்னு மக்கள் கொந்தளிக்குறாங்க.

அரசு அலுவலகங்கள் பல மாதங்களாக மின்கட்டணத்தை செலுத்தாம பாக்கி வச்சிருக்கிறதால, மின்வாரியத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுருக்குன்னு புகார் எழுந்துருக்கு.

ending electricity charge by Government offices in Sivaganga peoples angry on EB department

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு அலுவலகங்கள் பல மாதங்களாக கரண்ட் பில்லை சரிவர கட்டலன்னு பொதுமக்கள் புகார் கூறியிருக்காங்க. இதுல அதிகபட்சமா தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ரூ.2 கோடிக்கு மேல் மின்கட்டணம் பாக்கி வச்சியிருக்கிறதா கூறப்படுது. ஆனா மின்வாரிய அதிகாரிகள் நிலுவை தொகைய வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கலன்னு பொதுமக்கள் குற்றம்சாட்டி இருக்காங்க

திருச்சியில் ரயில் நிலைய வளாகத்திலிருந்த அம்மன் கோவில் இடித்து அகற்றம்.. பக்தர்கள் அதிர்ச்சி திருச்சியில் ரயில் நிலைய வளாகத்திலிருந்த அம்மன் கோவில் இடித்து அகற்றம்.. பக்தர்கள் அதிர்ச்சி

மாவட்ட வருவாய்துறையும் சுமார் ரூ.1.98 கோடிக்கு மேல் மின்கட்டண பாக்கி வச்சியிருக்கிறதா கூறப்படுது. இந்த மாதிரி சரியா கரண்ட் பில் கட்டாம உள்ளதுல முதல்வர் வசம் உள்ள காவல்துறையும் விதிவிலக்கு இல்ல. மானாமதுரை காவல்துறை ரூ.17 லட்சம் வரை மின்கட்டணம் கட்டாம இருக்காம்.

இது பற்றி பேசிய அப்பகுதியை சேர்ந்தவர்கள், பாமர மக்கள் கெடு தாண்டி ஒரு நாள் பில் கட்டலன்னா கூட, அவங்ககிட்ட கடமையை சரியா செய்யும் மின்வாரிய அதிகாரிகள் தற்போது அவங்க கண்ணை இறுக்கமா மூடிக்கிட்டு இருக்காங்களான்னு சரமாரியா கேள்வி எழுப்பியிருக்காங்க. அரசுத்துறை நிர்வாகமே மின்கட்டணத்தை சரியாக கட்டாம இப்படி ஒழுங்கீனமாக நடக்கலாமான்னும் மக்கள் கேள்வி எழுப்பியிருக்காங்க.

இது பற்றி மின்கட்டண பாக்கி வைத்துள்ள அரசு நிறுவனங்கள் கூறியுள்ள விளக்கம் அடடே ரகமா இருக்கு. எங்ககிட்ட நிதி இல்லாத காரணத்தால நிதி கொடுக்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறதா சொல்றாங்க.

பொதுமக்கள் சரியா கட்டணத்தை கட்டாவிட்டால் அபராதம் தீட்டும் மின்வாரியம், அரசுத்துறை அலுவலகங்கள் கிட்டேயும் இதே கண்டிப்பை காட்டணும்னு தான் பொதுமக்கள் எதிர்பாக்குறாங்க...

English summary
Many government offices in Sivagangai district are pendig electrial bill crore of rupees..
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X