சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஜெய்ச்சிட்டு வாங்க.. அப்புறம் பேசுங்க கெத்தா".. தடைகளை தகர்க்கும் காவ்யா.. சூப்பர் வைரல் வீடியோ!

தமிழகத்தின் முதல் பைலட் காவ்யா தன்னம்பிக்கை வார்த்தைகளை கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

சிவகங்கை: "முதல்ல ஜெயிச்சுட்டு பேசுங்க, அப்பதான் கெத்து.. குறிக்கோளை அடைய இதுதான் வழி.. நானே அப்படித்தான் பெண் பைலட் ஆனேன்.. என்னை சின்ன வயசுல ரொம்ப கிண்டல் செய்தாங்க... ஆனால் இப்போ ஆச்சரியமா பார்க்கறாங்க" என்று தமிழகத்தின் முதல் பெண் பைலட் காவ்யா நச்சென கூறுகிறார்.

சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்க விசாகம் பள்ளி என்றாலே சுற்றுவட்டாரத்தில் அவ்வளவு பிரபலம்.

நடுநிலை பள்ளி என்றாலும் மாணவர்கள் சமூக அக்கறை கொண்டவர்கள்.. நாட்டு நடப்புகள், இயற்கை இடர்கள் போன்ற மக்களை பாதிக்கும் எந்த விஷயங்களிலும் தங்களை இணைத்து கொண்டு துயர் துடைக்க முன்வருவார்கள்... இதற்கெல்லாம் முக்கிய காரணம் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம்தான்.

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

இப்போது இந்த பள்ளியில் மற்றொரு புதுமை நடந்துள்ளது.. தமிழகத்தின் முதல் பெண் விமானி காவ்யா இந்த பள்ளிக்கு வருகை தந்துள்ளார்.. மாணவர்களிடம் சகஜமாக பேசியதுடன், அவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் பேச்சுக்களையும், அனுபவங்களையும் முன்வைத்தார். காவ்யா பேசியது இதுதான்:

பெண் பைலட்

பெண் பைலட்

"நீங்க ஒவ்வொருவரும் என்னவாக வேண்டும் என்று குறிக்கோளை என்கிட்ட சொல்லிட்டீங்க.. சரி... ஆனால் அந்த குறிக்கோளை அடையணும்னா, முதல்ல அதை ஜெயிச்சுட்டு பேசுங்க, அப்பதான் கெத்து.. நானே அப்படித்தான் பெண் பைலட்டா ஜெயிச்சிட்டு வந்தேன். ஒரு பெண் பைலட் ஆவது சாதாரண விஷயம் இல்லை.. இதுக்கு நிறைய முயற்சி எடுக்கணும்.. பல லட்ச ரூபாய் செலவு செய்து படிக்கணும்.. பாதியில் ஏதாவது உடம்பு சரியில்லைன்னா அப்படியே திருப்பி அனுப்பிடுவாங்க.. இவ்வளவையும் கடந்துதான் நான் பைலட் ஆனேன்.

படிப்பு

படிப்பு

யாராச்சும் உங்களை பார்த்து கிண்டல் செய்றாங்கன்னு வெச்சுக்குங்க, உடனே கோபப்படாதீங்க.. அவங்க முன்னாடி நீங்க என்னவாக வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அதுவாக மாறி காண்பியுங்கள். படிப்பு இருந்தால் போதும்... என்னைகூட சின்ன வயசுல இப்படித்தான் கிண்டல் செய்தாங்க... இப்போ ஆச்சரியமா பார்க்கறாங்க.

மேக கூட்டம்

மேக கூட்டம்

வானத்துல பிளைட் சத்தம் கேட்டால் உடனே ரொம்ப நேரமா மேலேயே பார்த்துட்டு இருப்பேன்... ஆனால் இன்னைக்கு அந்த மேகக்கூட்டத்தின் நடுவில் கீழிருந்து 45,000 அடி மேலே போய் தைரியாமா பிளைட் ஓட்டறேன்.. என் அப்பா ஒரு பஸ் டிரைவர்.. நடுத்தர குடும்பம்தான்.. அப்படி இருந்தும் என்னால சாதிக்க முடிந்ததுன்னா உங்களால் ஏன் முடியாது? முயற்சி செய்து கொண்டே இருங்க.. வெற்றி வசப்படும்" என்றார்.

மதுரையைச் சேர்ந்தவர் காவ்யா. பெங்களூர் ஜக்கூரில் உள்ள விமானப் பயிற்சிப் பள்ளியில்தான் அவர் விமான பைலட்டுக்கான பயிற்சி மேற்கொண்டு லைசென்ஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
first woman pilot kavyas motivational speech, viral video
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X