சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தூதுவளை தோசை.. கம்பு பொங்கல்.. அவல் உப்புமா.. ஆஹா பிரமாதம்.. காரைக்குடி உணவு திருவிழாவில் அசத்தல்

Google Oneindia Tamil News

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் இன்று உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.

இன்று உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது. நவீன உணவுகளை புறக்கணித்துவிட்டு பாரம்பரிய உணவுகளுக்கு மக்கள் மாற வேண்டும் என்பதை விளக்குவதற்காக உணவு தினத்துக்கான விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

வரகு, கம்பு, சோளம், குதிரைவாலி, திணை, சாமை உள்ளிட்ட சிறுதானியங்கள் உடல்நலத்துக்கு சத்தான உணவு என்பதை அனைவரும் உணர வேண்டும். குழந்தைகளுக்கும் பீசா, பர்கர் போன்ற உணவுகளை அறிமுகப்படுத்துவதற்கு பதில் சிறுதானிய பலகாரங்களையும், சிறுதானியங்களால் செய்யப்பட்ட உருண்டைகளையும் கொடுக்க வேண்டும்.

திருவிழா

திருவிழா

உணவு தின விழாவையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் இன்று உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் குரு மல்லேஷ் பிரபு தலைமையேற்றார். சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலு முத்து, மாவட்டக் கல்வி அலுவலர் சாமி சத்யமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி ஜென்னிஸ் அகாடமி தொழில்நுட்ப இயக்குநர் பொன்னிளங்கோ அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பட்டதாரி ஆசிரியர் திரு. நெகேமியாஸ் ராயன் வரவேற்றார்.

வாழ்த்துரை

வாழ்த்துரை

மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சேதுராமன் அவர்கள், வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சுவாமிநாதன், ரோட்டரி சங்க துணை கவர்னர் முத்துக்குமார் ,ரோட்டரி கிளப் ஆப் பேர்ல் சங்கமம் பட்டயத் தலைவர் நாச்சியப்பன், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உதவி பேராசிரியர் கார்த்திலிங்கம், விரலி நெய் கம்பெனி இயக்குனர்வெங்கட் , பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சகாய அமலன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அழகுசுந்தரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

உணவு வகைகள்

உணவு வகைகள்

மாணவர்கள் 20 அறைகளில் கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற நவதானியங்களில் புட்டு, ரொட்டி, இடியாப்பம், கொழுக்கட்டை போன்ற பாரம்பரிய உணவுகளையும், பழம் மற்றும் சாலட் உணவு வகைகளையும் காட்சிப்படுத்தினர்.

கண்காட்சி

கண்காட்சி

பல்வேறு கீரை உணவு வகைகள், சிற்றுண்டி உணவு வகைகள், வித விதமான சாத வகைகள் என பல்வேறு உணவுகளை வைத்திருந்தனர். பெற்றோர்கள், காரைக்குடி வாழ் பொது மக்கள் கண்காட்சியை பார்வையிட்டு பாராட்டினர்.

சிறப்பு அழைப்பாளர்கள்

சிறப்பு அழைப்பாளர்கள்

எவ்வளவு உணவு உண்டீர்கள் என்பதை பார்ப்பதை காட்டிலும் என்ன உணவு எடுத்துக் கொண்டீர்கள் என்பதை பாருங்கள் என்பன உள்ளிட்ட பதாகைகளை மாணவர்கள் ஏந்தியிருந்தனர். தூதுவளை உள்ளிட்ட மூலிகைகளினால் செய்யப்பட்ட தோசை உள்ளிட்டவையும் அங்கிருந்தன. அவை சிறப்பு அழைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.

நன்றியுரை

நன்றியுரை

நிகழ்வின் இறுதியில் பட்டதாரி ஆசிரியர் திருமதி. கோமதி ஜெயம் நன்றி கூறினார். காரைக்குடி பேக்கரி ஓனர் அசோசியேசன் காளீஸ்வரன், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் சிவக்குமார், இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பீட்டர் ராஜா ஆகியோர் இணைந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.

English summary
Food festival is celebrated in Sivagangai Karaikudi Ramanathan Chettiyar Higher Secondary school.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X