சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக தேர்தல் அறிக்கை என்பது வெறும் டிஷ்யூ பேப்பர்.. ஹெச்.ராஜா கருத்து

Google Oneindia Tamil News

சிவகங்கை:திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது வெறும் டிஷ்யூ பேப்பர் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக தலைமையில், பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. லோக்சபாவில் மொத்தம் 5 தொகுதிகளில் அந்த கட்சி போட்டியிடுகிறது.

இந்நிலையில், சிவகங்கை லோக்சபா தொகுதி, மானாமதுரை சட்டசபை இடைத்தேர்தல் தொகுதிக்கான கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் சிவகங்கையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

கட்சியே அறிவிக்கல.. அதுக்குள்ள முந்திக்கொண்டு சொன்ன ஹெச்.ராஜா.. இதோ வேட்பாளர் பட்டியல் கட்சியே அறிவிக்கல.. அதுக்குள்ள முந்திக்கொண்டு சொன்ன ஹெச்.ராஜா.. இதோ வேட்பாளர் பட்டியல்

ஹெச்.ராஜா பேட்டி

ஹெச்.ராஜா பேட்டி

அதில் கூட்டணி கட்சியான பாஜக சார்பில் தேசிய செயலாளர் ஹெச். ராஜா பங்கேற்றார்.கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.

நிலைமை வேறு

நிலைமை வேறு

அப்போது அவர் கூறியதாவது:40 நாட்களுக்கு முன்னதாக இருந்த நிலை வேறு இன்றைக்கு உள்ள நிலை வேறு? ஏன் என்றால் 40 தொகுதிகள் மட்டுமில்லாமல் இடைத்தேர்தல்களிலும் மெகா கூட்டணியே வெற்றி பெறும்.

கஜா புயல் பாதிப்பு

கஜா புயல் பாதிப்பு

அதற்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசு கொண்டுவந்த திட்டங்கள் உதவியாக இருக்கும். கஜா புயலின் போது நேரில் சென்று பார்த்தேன். லட்சக்கணக்கான மின் கம்பங்கள் 1 வாரத்திற்குள் புனரமைக்கப்பட்டது என்பது எங்கேயாவது நடந்திருக்குமா?

புகழ்பெற்ற அரசாங்கம்

புகழ்பெற்ற அரசாங்கம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார். அதோடு உலக புகழ்பெற்ற அரசாங்கம் மோடி தலைமையில் உள்ளது. இந்த இரு சக்திகள் இணைந்துள்ளபோது வேறு எந்த சக்திகளும் பூமியில் இல்லை.

திமுக அறிக்கை டிஷ்யூ பேப்பர்

திமுக அறிக்கை டிஷ்யூ பேப்பர்

திமுகவின் தேர்தல் அறிக்கை சாதாரண டிஷ்யூ பேப்பர். காரணம் 1 கோடி மக்கள் நல பணியாளர்கள், 50 லட்சம் சாலை பணியாளர்கள், தமிழ்நாட்டில் ஒன்றரை கோடி குடும்பங்கள் உள்ளது.

நீதிமன்றம் கேள்வி

நீதிமன்றம் கேள்வி

இந்த இரண்டில் மட்டும் அவர்களுக்கு வேலை செய்ய இடமிருக்கிறதா? அவர்களுக்கு ஊதியம் அளிக்க நிதி இருக்கிறதா? நீதிமன்றமே இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறது.

படி அரிசி வழங்கினார்களா?

படி அரிசி வழங்கினார்களா?

1967ம் ஆண்டு எனக்கு ஞாபகம் வருகிறது. 3 படி அரிசி லட்சியம் 1 படி நிச்சயம் என தெரிவித்தார்கள். ஆனால் என்றைக்காவது ஒருநாள் 1 படி வழங்கினார்களா? ஆகவே திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது வெற்று காகிதம் என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.

English summary
BJP National Secretary H. Raja has strongly criticized the DMK's election statement as a tissue paper.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X