சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹெச்.ராஜா வெற்றி பெற வேண்டி.. தினமும் பிரார்த்தனை செய்யும் மதுரை ஆதீனம்

Google Oneindia Tamil News

Recommended Video

    எச்.ராஜாவுக்காக தினமும் பிரார்த்தனை செய்கிறேன் - மதுரை ஆதினம்- வீடியோ

    காரைக்குடி: சிவகங்கை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா வெற்றி பெற வேண்டும் என தினமும் பிரார்த்தனை செய்வதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை 'அம்மா' என அழைத்து அதிமுகவுடன் மிகவும் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தியவர் மதுரை ஆதீனம் அருணகிரி நாதர்.

    i pray for BJP H Raja to winning sivagangai parliament constituency: says madurai aadheenam

    ராமதாஸ் மக்களை ஏமாற்றி கட்சி நடத்துகிறார்.. பாமக துணைத்தலைவர் மணிகண்டன் கட்சியில் இருந்து விலகல்!ராமதாஸ் மக்களை ஏமாற்றி கட்சி நடத்துகிறார்.. பாமக துணைத்தலைவர் மணிகண்டன் கட்சியில் இருந்து விலகல்!

    இவர் அண்மையில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுகவுடன் இணைய வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். விரைவில் அது நடக்கும் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு டிடிவி தினகரன் கடும் கண்டனமும் தெரிவித்ததோடு, மீண்டும் இதேபோல் பேசினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

    இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா மற்றும் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் ஹெச்.ராஜா வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன்.

    அதற்காக இறைவனிடம் தினமும் பிரார்த்தனை செய்கிறேன். இதேபோல் நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்றும், தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றும் தினமும் பிரார்த்தனை செய்கிறேன்" இவ்வாறு கூறினார்.

    English summary
    Madurai Aadheenam says, i pray for BJP H Raja to winning sivagangai parliament constituency and i also pray for again modi as prime minister
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X