சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமிறிய காளைகளை தில்லாக அடக்கிய காளையர்கள்... சிவகங்கையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்

Google Oneindia Tamil News

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

அமராவதி புதூர் கருப்பர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியில், 90 காளைகள் பங்கேற்றன. சீறிபாய்ந்து சென்ற காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.

Jallikattu competition near Karaikudi in Sivagangai district.

ஜல்லிக்கட்டு போட்டியைக் காண, சுற்றுவட்டார கிராம மக்கள் குவிந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே மேலக்கோட்டை அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி அழகமாநகரி கிராமத்தை சேர்ந்த பாலகுரு என்கிற இளைஞர் உயிரிழந்தார்.

அமைச்சராக்கினால் ஆட்சிக்கு முழு ஆதரவு தருகிறேன்.. குமாரசாமிக்கு நெருக்கடி தரும் சுயேச்சை எம்.எல்.ஏ அமைச்சராக்கினால் ஆட்சிக்கு முழு ஆதரவு தருகிறேன்.. குமாரசாமிக்கு நெருக்கடி தரும் சுயேச்சை எம்.எல்.ஏ

இந்தநிலையில், உச்ச நீதிமன்ற வலிகாட்டுதலின் படி போட்டி நடைபெறுகிறதா என்பது குறித்து விலங்குகள் நலவாரிய உறுப்பினர் எஸ் .கே. மிட்டல் நேரில் ஆய்வு செய்தார். பொங்கல் பண்டிகையில் இருந்து, சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

English summary
Many people enjoyed the Jallikattu competition near Karaikudi in Sivaganga district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X