சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீறி வந்த காளை.. தாய், குழந்தையை கண்டு அப்படியே பொட்டிப் பாம்பாய் அடங்கிய அதிசயம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Sivagangai Jallikattu festival | Siravayal Manjuvirattu 2020

    சிவகங்கை: மஞ்சுவிரட்டின் போது ஆவேசமாக ஓடி வந்த காளை ஒன்று எதிரில் வந்த தாய் மற்றும் குழந்தையைக் கண்டதும் தன் ஆவேசத்தை அடக்கி அவர்களைத் தாண்டி சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புகழ்பெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டு ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த மஞ்சுவிரட்டை காண்பதற்காக சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வருவார்கள்.

    Jallikattu festival in Tamil Nadus sivagangai district

    மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் தொழுவில் காளைகளை அவிழ்ப்பதற்கு முன்பாக, கட்டு மாடுகளாக வயல்வெளி மற்றும் கண்மாய் பகுதிகளில் மாடுகளை அவிழ்த்து விடுவார்கள். இதனை காண்பதற்கு மக்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக நிற்பதால், அவிழ்த்து விடப்படும் காளைகள் பார்வையாளர்கள் பகுதிக்குள் புகுந்து காயங்களை ஏற்படுத்தும்.

    Jallikattu festival in Tamil Nadus sivagangai district

    அதேபோன்று நேற்று நடந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், ஆவேசமாக வந்த காளை ஒன்று, எதிரில் ஒரு பெண் தன் குழந்தையுடன் வந்ததை கண்டதும், காளை தன் ஆவேசத்தை அடக்கி அவர்களைத் தாண்டி சென்றது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Jallikattu festival in Tamil Nadus sivagangai district

    Jallikattu festival in Tamil Nadus sivagangai district
    English summary
    Jallikattu festival in Tamil Nadu's sivagangai district
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X