சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கார்த்திகா.. உனக்கு மட்டும்தான் பிரச்சனை இருக்கா.. சுற்றி திரும்பி பார்.. நூதன தண்டனை தந்த நீதிபதி

தற்கொலைக்கு முயற்சி செய்த பெண்ணுக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார்

Google Oneindia Tamil News

Recommended Video

    உனக்கு மட்டும்தான் பிரச்சனை இருக்கா?.. நூதன தண்டனை தந்த நீதிபதி- வீடியோ

    காரைக்குடி: திருடன் கையிலேயே சாவி கொத்து தர்ற மாதிரி.. கார்த்திகாவுக்கு நீதிபதி ஒரு அசத்தல் தண்டனையை தந்திருக்கிறார்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகா. வயசு 25 ஆகிறது. கல்யாணம் ஆகி 11 மாத குழந்தை உள்ளது. செக்காலைவீதியில் ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். ஆனால் கடையில் இவருக்கு சக ஊழியர்கள் தொந்தரவு தந்திருக்கிறார்கள் போலும்.

    அதனால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தார். அதற்கு முன்னதாக, எதற்காக தற்கொலை என்று காரணம் சொல்லி வாட்ஸ்அப் வீடியோவில் அழுதார். இந்த வீடியோ மீது நடவடிக்கை எடுக்கவும் கோரியிருந்தார். பிறகு கார்த்திகா விஷமும் குடித்துவிட்டார்.

    என்னை விட்டுடு.. கெஞ்சி கதறிய ஆசிரியர்.. விடாமல் குத்தி கொன்ற மைத்துனர்.. வேடிக்கை பார்த்த மக்கள்என்னை விட்டுடு.. கெஞ்சி கதறிய ஆசிரியர்.. விடாமல் குத்தி கொன்ற மைத்துனர்.. வேடிக்கை பார்த்த மக்கள்

    விஷம்

    விஷம்

    அந்த வீடியோவில், "குடும்ப சூழல் காரணமாக வேலை பார்க்கிறேன். ஆனால், கடையில் 3 பேர் எனக்கு பாலியல் தொந்தரவு தருகிறார்கள். இதனால் எனக்கு குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு விட்டது. இதை சொல்லியும் நிர்வாகம் கண்டிக்கவே இல்லை. அதனால்தான் இந்த தற்கொலை முடிவு எடுக்கிறேன்" என்று சொல்லி கொண்டே வாயில் விஷத்தை ஊற்றுகிறார்.

    வீடியோ

    வீடியோ

    கார்த்திகா தற்கொலை செய்து கொள்ள போகிறார் என்ற தகவலும், அழுகையுடன் வந்த வீடியோவும் வேகவேகமாக இணையத்தில் பரவி பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இதனிடையே தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கார்த்திகாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றி விட்டனர். ஏனெனில் கார்த்திகா குடித்தது விஷம் இல்லை, சோப்பு ஆயில் என்பது பிறகுதான் தெரியவந்தது.

    பாலமுருகன்

    பாலமுருகன்

    எனினும் இது சம்பந்தமாக காரைக்குடி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நடுவர் பாலமுருகன் தாமாக எடுத்து விசாரிக்க முன்வந்தார். கார்த்திகாவை கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறும் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் கார்த்திகா ஆஜர்படுத்தப்பட்டார்.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    அப்போது கார்த்திகாவிடம் நீதிபதி, "நடந்த சம்பவம் குறித்து போலீசார் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?" என்று கேட்டார். அதற்கு கார்த்திகா, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். உடனே நீதிபதி, "என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்" என்று போலீசாரை பார்த்து கேட்டார். அதற்கு போலீசார், "எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்னு கார்த்திகாதான் சொன்னார்" என்று பதிலளித்தனர்.

    மதிப்பு தெரியுமா?

    மதிப்பு தெரியுமா?

    இதையடுத்து நீதிபதி கார்த்திகாவிடம், "உனக்கு மட்டும்தான் இந்த உலகத்துல பிரச்சனை இருக்கா.. சுற்றி திரும்பி பார்.. எத்தனை பேருக்கு எவ்வளவு பிரச்சனை இருக்கு தெரியுமா? பிரச்சனை இருக்கிறவங்க எல்லாம் தற்கொலை செய்து கொண்டால் இங்கு யாருமே வாழ முடியாது. நீங்க அந்த வீடியோவை போட்டீங்களே.. அதனால் எத்தனை பேருக்கு மன உளைச்சலை தந்தது தெரியுமா? உயிரோட மதிப்பு உனக்கு தெரியல. அதனால ஒரு தண்டனை தர போறேன்.

    கவுன்சிலிங்

    கவுன்சிலிங்

    காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு ஒரு வாரம் செல்லுங்கள். அங்கு தற்கொலை முயற்சி செய்து, அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு கவுன்சிலிங் தர வேண்டும். தற்கொலையே கூடாது, அது எவ்வளவு கொடியது என்று அவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். அவர்களுக்கு தற்கொலை மனநிலையை போக்கும் வகையில் உங்கள் விழிப்புணர்வு கவுன்சிலிங் இருக்க வேண்டும்" என்று வித்தியாசமான தண்டனை தந்து உத்தரவிட்டார்.

    English summary
    Judge gave a different punishment the woman who attempted suicide near Sivagangai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X