• search
சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

ஹிந்தி + இந்துத்துவா.. இது ரெண்டுமே நம்மகிட்ட எடுபடாது.. பாஜகவுக்கு இதான் வேலை: கார்த்தி சிதம்பரம்

Google Oneindia Tamil News

சிவகங்கை: "மத்திய அரசின் ஹிந்தி, இந்துத்துவா கொள்கையை தமிழக மக்கள் நிராகரித்துக்கொண்டே இருப்பார்கள்.. இஸ்லாமிய பெண்களை தடுத்து விரட்டுகிறார்களே அந்த விஷம செயல்பாட்டைத்தான் பாஜக செய்யும்... அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைத்து வளர்ச்சி பாதையிலே கொண்டு செல்ல பாஜகவால் முடியாது. அதனால்தான் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை நிராகரித்துக்கொண்டே இருப்பார்கள்" என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திவிட்டது.. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

5 மாநிலங்களில் விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில், அங்கு இந்த ஹிஜாப் விவகாரம் எந்த மாதிரியாக எதிரொலிக்கும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.. அதேபோல தமிழகத்திலும் அடுத்த சில தினங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க போகிறது..

கடவுளே வந்தாலும் சீட்டை அதிகரிக்க முடியாது! இருப்பதை தான் பிரிக்க வேண்டும் -கார்த்தி சிதம்பரம் கடவுளே வந்தாலும் சீட்டை அதிகரிக்க முடியாது! இருப்பதை தான் பிரிக்க வேண்டும் -கார்த்தி சிதம்பரம்

பாஜக

பாஜக

இந்த முறை பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஹிஜாப் விவகாரம் எந்த அளவுக்கு பாஜகவுக்கு இடையூறாக இருக்கும் என்று தெரியவில்லை.. அல்லது பாஜக தனித்து போட்டியிட்டு, தன்னுடைய பலத்தை எந்த அளவுக்கு பெருக்கி காட்டும் என்றும் தெரியவில்லை.. மற்றொரு புறம் இந்த ஹிஜாப் விவகாரத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரமும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

யூனிபார்ம்

யூனிபார்ம்

கடந்த வாரம்கூட இவர் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், ஹிஜாப்பை தடை செய்வது என்பது மாணவியரின் உடையை சீர்படுத்துவதற்காக கிடையாது.. அதையே சாக்காக வைத்து, உங்களை நாங்கள் குறி வைத்துக்கொண்டு இருக்கிறோம் என்று இஸ்லாமை பின்பற்றும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாக எச்சரிக்கை விடுகின்றனர்... இஸ்லாமியர்களை எதிர்க்கும் இவர்களால், அதே எதிர்ப்பை வகுப்பிற்கு டர்பன் கட்டி வரும் சீக்கியருக்கு எதிராக செய்ய முடியுமா? அப்படி ஒரு துணிச்சல் இவங்களுக்கு இருக்கிறதா?

ஹிட்லர்

ஹிட்லர்

1933ல் ஜெர்மனி ஹிட்லரின் நாசி கட்டுப்பாட்டில் இருந்தசமயம், அங்கு யூதர்களுக்கு எதிராக ஏகப்பட்ட கொடுமைகள் நடந்தன.. நாசிகள் தங்கள் கைகளில் ஸ்வதிகா என்ற முத்திரை கொண்ட பேண்ட்களை அணிந்து கொண்டனர்.. பல கல்வி நிறுவனங்களில் யூதர்களை உள்ளே விடாமல் நாசிகள் அப்போது தடுத்தனர்.. கடைசியில் அது ஹேலாலோகாஸ்ட் (Holocaust) படுகொலை வரை சென்று முடிந்துவிட்டது. அப்படிப்பட்ட படுகொலைகளுக்கு இணையாக தான் நம்ம நாட்டிலும் நடந்து கொண்டிருக்கிறது" என்று கூறியிருந்தார்.

ஹிஜாப் விவகாரம்

ஹிஜாப் விவகாரம்

இந்நிலையில், மீண்டும் கார்த்தி சிதம்பரம், ஹிஜாப் விவகாரம் குறித்து பேசியுள்ளார்.. சிவகங்கையில் பிரச்சாரம் மேற்கொண்ட கார்த்தி சிதம்பரம், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது, "நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சி கூட்டனி வெற்றிபெற்றதைபோல் இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றிபெறும்.. தேர்வு நடத்துவதற்கு உரிமையில்லை.. சட்டமன்றத்திலே நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் கண்டிப்பாக குடியரசுத்தலைவருக்கு அனுப்பிதான் ஆக வேண்டும். அதுதான் மரபு.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

மத்திய அரசின் ஹிந்தி, இந்துத்துவா கொள்கையை தமிழக மக்கள் நிராகரித்துக்கொண்டே இருப்பார்கள்.. கர்நாடக மாநிலத்தில் காலம் காலமாக கல்லூரிக்கு செல்லும் இஸ்லாமிய பெண்களை தடுத்து விரட்டுகிறார்களே அந்த விஷம செயல்பாட்டைத்தான் பாஜக செய்யும்... அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைத்து வளர்ச்சி பாதையிலே கொண்டு செல்ல பாஜகவால் முடியாது. அதனால்தான் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை நிராகரித்துக்கொண்டே இருப்பார்கள்.. அன்னைக்கு ராகுல் சொன்னாரே, அது முற்றிலும் உண்மை" என்றார்.

English summary
Karthi Chidambaram comments on Karnataka Hijab and TN Local body election in Sivagangai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X