சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம் என்பது பனிமலையின் நுனி… ஹெச். ராஜா விமர்சனம்

Google Oneindia Tamil News

சிவகங்கை: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பது பனிமலையின் நுனி என பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களமிறங்கியுள்ள கார்த்தி சிதம்பரத்தின் 22 கோடி ரூபாய் சொத்தை அமலாக்கப்பிரிவினர் முடக்கியுள்ளனர்.

Karthi Chidambarams assets are freezing is tip of the iceberg Says H. Raja

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் தேசியச் செயலாளருமான ஹெச் ராஜா, ஐஎன்எக்ஸ் மீடியாவுக்காக 22 கோடியை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது என்றார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு கார்த்தி சிதம்பரத்தின் 54 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டிய ஹெச்.ராஜா, இது பனிமலையின் சின்ன நுனி என்றும் போகப் போக பல விஷயங்கள் வெளியே வரும் எனவும் தெரிவித்தார்.

 கடவுள் கிருஷ்ணர் பற்றிய வீரமணி பேச்சு.. இல.கணேசன், ஹெச்.ராஜா கண்டனம் கடவுள் கிருஷ்ணர் பற்றிய வீரமணி பேச்சு.. இல.கணேசன், ஹெச்.ராஜா கண்டனம்

இதற்கிடையே, ஊழல் அரசியலையும், குடும்ப ஆதிக்க அரசியலையும் அழித்தால்தான் ஜனநாயகத்திற்கு நல்லது என்றும், உங்கள் அன்பு, ஆதரவு, மற்றும் ஆசியுடன் மகத்தான வெற்றி சாத்தியமாகும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

English summary
BJP's national secretary H. Raja commented on Congress Party candidate Karti Chidambaram's assets have been frozen
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X