சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாடாளுமன்ற வளாகத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை நிறுவ வேண்டும் -கருணாஸ்

Google Oneindia Tamil News

சிவகங்கை: நாடாளுமன்ற வளாகத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை நிறுவவேண்டும் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சின்ன மருது, பெரிய மருது என்றழைக்கப்பட்ட மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை தமிழ் மண்ணில் இருந்து விரட்டி அடிப்பதற்காக தங்கள் வாழ்நாள் முழுவதும் நெஞ்சுரத்தோடு போர் புரிந்தவர்கள். அக்டோபர் 24-ம் தேதி ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட சின்ன மருது மற்றும் பெரிய மருதுவின் நினைவிடம் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ளது.

Karunas says, a statue of Maruthu Brothers should be installed in the Parliament premises

அங்கு நடைபெற்று வரும் குருபூஜை விழாவில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் இன்று கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், நாடாளுமன்ற வளாகத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை நிறுவ வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் மருது பாண்டியர்களுக்கு தமிழக அரசு சார்பில் அடையாளச் சின்னம் நிறுவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், யாராக இருந்தாலும் பிறர் மனம் புண்படும் படி பேசக்கூடாது என்றும், அவ்வாறு பேசியிருப்பதை ஏற்க முடியாது எனவும் திருமாவளவனை சூசகமாக சாடினார்.

இலங்கை என் பங்காளி...நான் என்னவோ செய்வேன்.. அதை நீ ஏன் கேட்கிற மேன்? அமெரிக்காவிடம் சீனா ஒரண்டை இலங்கை என் பங்காளி...நான் என்னவோ செய்வேன்.. அதை நீ ஏன் கேட்கிற மேன்? அமெரிக்காவிடம் சீனா ஒரண்டை

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டக்கோரி ஏற்கனவே முக்குலத்தோர் சமுதாய அமைப்புகள் சார்பில் கோரிக்கை வைத்து வரும் நிலையில், இப்போது நாடாளுமன்றத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் கருணாஸ் முன் வைத்துள்ள இந்தக் கோரிக்கையால் பாஜகவுக்கு தர்மசங்கடமான நிலை உருவாகியுள்ளது.

English summary
Karunas says, a statue of Maruthu Brothers should be installed in the Parliament premises
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X