சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எவ்வளவு ஓட்டு வாங்குவீங்க.. ஏதாவது சொல்லுங்கண்ணே பார்த்துக்கலாம்.. எச்.ராஜா பிரஸ் மீட்டில் கலகல!

பாஜக சார்பாக இன்று சிவகங்கையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வேட்புமனுத்தாக்கல் செய்த போது நிறைய சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது.

Google Oneindia Tamil News

சிவகங்கை: பாஜக சார்பாக இன்று சிவகங்கையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வேட்புமனுத்தாக்கல் செய்த போது நிறைய சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது.

கடந்த ஒருவாரமாக பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகாமல் தொடர்ந்து தள்ளிப்போய்கொண்டு இருந்தது. இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது.

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பாஜக சார்பாக சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

தமிழிசை, திருநாவுக்கரசர்.. குபுகுபுவென குவிந்த விஐபி வேட்பாளர்கள்.. களை கட்டிய வேட்பு மனு தாக்கல்தமிழிசை, திருநாவுக்கரசர்.. குபுகுபுவென குவிந்த விஐபி வேட்பாளர்கள்.. களை கட்டிய வேட்பு மனு தாக்கல்

தேங்காய் உடைத்தார்

தேங்காய் உடைத்தார்

எச்.ராஜா சிவகங்கையில் வேட்புமனு தாக்கல் செய்யும் முன் அங்கிருக்கும் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அதன்பின், கோவிலில் தேங்காய் உடைத்து தொண்டர்களுடன் சேர்ந்து வழிபாடு நடத்தினார். பின் நேரடியாக தொண்டர்களுடன் தேர்தல் அலுவலகம் சென்று மனுதாக்கல் செய்தார்.

கோஷம் எழுப்பினார்கள்

கோஷம் எழுப்பினார்கள்

எச்.ராஜா செல்லும் வழி முழுக்க அவரது தொண்டர்கள் கோஷம் எழுப்பிக்கொண்டே அவரை பின் தொடர்ந்தனர். காவி கொடிகளையும், பாஜக கொடியையும் வைத்துக் கொண்டே அவரை தொண்டர்கள் பின்தொடர்ந்து வந்து கொண்டு இருந்தனர்.

காரைக்குடி தெரியும்

காரைக்குடி தெரியும்

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, நான் காரைக்குடியில் பிறந்ததில் இருந்து வசித்து வருகிறேன். எனக்கு சிவகங்கையை நன்றாக தெரியும். தூரத்தில் இருந்து கண்ணாடி வழியாக சிவகங்கையை பார்க்க மாட்டேன். நான் மக்களுடன் மக்களாக உழைப்பேன். மக்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று கூறினார்.

செய்தியாளர் என்ன சொன்னார்

செய்தியாளர் என்ன சொன்னார்

இதையடுத்து செய்தியாளர் ஒருவர், எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு எத்தனை வாக்குகள் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் வெற்றி எங்கள் பக்கம்தான் இருக்கிறது. கண்டிப்பாக இந்த தேர்தலில் வெற்றி உறுதியாக எங்களுக்கு கிடைக்கும், என்று கூறினார்.

எதையாவது சொல்லுங்க

எதையாவது சொல்லுங்க

எச்.ராஜா பேசிக்கொண்டே இருக்கும் போது குறுக்கிட்ட அவரது ஆதரவாளர், எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவீர்கள் என்ற கேள்விக்கு, எதையாவது சொல்லி விடுங்கண்ணே பார்த்துக்கலாம் என்று எச்.ராஜாவை பார்த்து கூறினார். இதையடுத்து அங்கு சில நிமிடம் எல்லோரும் சிரித்தனர்.

English summary
Lok Sabha Elections 2019: BJP's candidates' H Raja's epic press meet after his nomination fillings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X