சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சோறு குடுக்ககூட ஆள் இல்லை.. சாகபோறேன்.. டவரில் ஏறிய வெங்கடேஷ்.. சமாதானப்படுத்தி இறக்கிய கார்த்திக்!

செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது

Google Oneindia Tamil News

Recommended Video

    சாகபோறேன்.. டவரில் ஏறிய வெங்கடேஷ்.. சமாதானப்படுத்திய கார்த்திக்!-வீடியோ

    சிவகங்கை: "எனக்கு சோறு வடிச்சு குடுக்கக்கூட ஆள் இல்லை.. நான் சாக போறேன்" என்று செல்போன் டவரில் ஏறி கொண்டு தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

    காரைக்குடி முத்துப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் இங்குள்ள ஒரு தனியார் தொலை தொடர்பு உயர் கோபுரத்தின் மீது இன்று மதியம் ஏறி நின்று கொண்டார்.

    Man attempts suicide from Cellphone Tower

    அப்போது, "என் பொண்டாட்டி 3 வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாள். 2 மகள்கள் எனக்கு இருக்காங்க. காலேஜ் படிக்கிறாங்க. ஆனால், ரெண்டு பெண்களுமே என் மாமியார் வீட்டில் இருக்கிறாங்க. எனக்கு சோறு வடிச்சு கொடுக்க கூட ஆள் இல்லை. அனாதையா வாழ்ந்துட்டு இருக்கேன். எனக்கு வாழவும் பிடிக்கலை" என்று தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

    சிறுத்தைபோல் நடந்து சென்றாய்.. நீ வடக்கிலே கிழக்கு.. வைகோவுக்கு வைரமுத்து உணர்ச்சிகர வாழ்த்து சிறுத்தைபோல் நடந்து சென்றாய்.. நீ வடக்கிலே கிழக்கு.. வைகோவுக்கு வைரமுத்து உணர்ச்சிகர வாழ்த்து

    இதனால் அந்த பகுதியில் இருந்தவர்கள் திரண்டு வந்து விட்டார்கள். எவ்வளவோ சொல்லியும் வெங்கடேஷ் கீழே இறங்கி வரவே இல்லை. அதனால் உடனடியக பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவர்களும் கீழே இறங்கி வருமாறு சொன்னார்கள்.

    அதற்கு வெங்கடேஷ், "என் மாமியார் வீட்டில் இருக்கிற என் மகள்களை மீட்டு தந்தால்தான் கீழே இறங்குவேன்" என்றார். உடனே தீயணைப்பு வீரர்களில் ஒருவரான கார்த்திக் டவர் மீது ஏறி, வெங்கடேஷிடம் சமாதானம் பேசி, மகள்களை மீட்டு தருவதாக கூறி மெதுவாக கீழே இறங்க வைத்தார். இதற்கே ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகிவிட்டது. இதனால் கொஞ்ச நேரத்துக்கு அந்த இடமே பரபரப்பாகி விட்டது

    English summary
    Man attempts suicide from Cellphone Tower due to family issue near Sivagangai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X