சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கார்த்தி சிதம்பரத்துக்கு தகுதி இருக்கு! ஆனால் ஹெச் ராஜாவுக்கு? ஸ்டாலின் கடும் விமர்சனம்

Google Oneindia Tamil News

சிவகங்கை: கார்த்தி சிதம்பரம் வாரிசு அடிப்படையில் சிவங்ககையில் போட்டியிடவில்லை என்றும் தகுதியின் அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மானாமதுரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சிவங்கை மாவட்டம் மானமதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாள ர் காசி லிங்கம் என்கிற இலக்கிய தாசன் மற்றும் சிவகங்கை மக்களை தொகுதியில்போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை ஆதரித்து மானாமதுரையில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், தலைவர் கருணாநிதி இல்லாமல் நடக்கும் தேர்தல் என்பது உங்களுக்கு தெரியும். இயற்கையின் சதி அவரை நம்மிடம் இருந்து பிரித்து இருந்தாலும், நம் உள்ளத்தில் என்றைக்கும் நம் உதிரத்தோடு கலந்து இருப்பார்.

ஒரு பக்கம் வாக்கிங்.. மறு பக்கம் டாக்கிங்.. அட பனியன் மேல யாரு பாருங்கோ.. மதுரையை கலக்கிய ஸ்டாலின் ஒரு பக்கம் வாக்கிங்.. மறு பக்கம் டாக்கிங்.. அட பனியன் மேல யாரு பாருங்கோ.. மதுரையை கலக்கிய ஸ்டாலின்

மிகப்பெரிய பொறுப்பு

மிகப்பெரிய பொறுப்பு

அவர் இல்லாத இந்தநிலையில், அவருடைய மகனாக உங்களிடம் வாக்கு கேட்க வந்திருக்கிறேன். ஆதரவு கேட்க வந்திருக்கிறேன். மானம் காத்த மருது பாண்டியர் மண்ணுக்கு நான் வந்திருக்கிறேன். சிவகங்கை சீமைக்கு வந்திருக்கிறேன். மானம் காத்த மருது பாண்டியர்களின் வாரிசுகளான உங்களிடத்திலே தமிழ்நாட்டின் மானத்தை காக்க வேண்டிய பொறுப்பு, இந்தியாவின் மானத்தை காக்க வேண்டிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எடப்பாடியை விரட்டும் தேர்தல்

எடப்பாடியை விரட்டும் தேர்தல்

வருகிற 18ம் தேதி மத்தியிலே பிரதமர் மோடி தலைமையிலான பாசிச பாஜக ஆட்சியை அப்புறப்படுத்துவதற்காக நடைபெறக்கூடிய தேர்தல் தான் நாடாளுமன்றத்தினுடைய தேர்தல். அதை ஒட்டி தமிழகத்திலே 18 இடங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதிலே ஒன்று தான் மானாமதுரை. இந்த தேர்தல் மூலம் கமிசன் கரப்சன், கலெக்சன் என தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிற எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும்.

கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சகோதரர் கார்த்தி சிதம்பரத்தை நான் அதிகமாக உங்களிடம் விளம்பரப்படுத்த வேண்டியதில்லை. அவரை அறிந்தவர்கள் புரிந்தவர்கள் நீங்கள். கிராமத்திலே பழமொழி சொல்வார்கள், கொல்லன் தெருவிலே ஊசி விற்ற கதை, ஆகவே நான் அதிகமாக அவரை விளம்பரப்படுத்த தேவையில்லை.

வாரிசு அரசியல்

வாரிசு அரசியல்

ப சிதம்பரம் அவர்களின் மகன் என வாரிசாக கார்த்தி சிதம்பரத்தை விமர்சனம் செய்யலாம். ஆனால் அவர் வாரிசு அடிப்படையில் அல்ல, தகுதியின் அடிப்படையில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். நீங்கள் வேறு ஒன்றையும் சிந்தித்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

ஹெச்.ராஜா மீது விமர்சனம்

ஹெச்.ராஜா மீது விமர்சனம்

கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் (ஹெச் ராஜா0 யார் என்பது உங்களுக்கு தெரியும். புரியும். அவருடைய வன்டவாளங்கள் அனைத்தையும் அறிந்து வைத்திருக்கக்கூடியவர்கள் நீங்கள். ஹெச் ராஜா ஆளும் கட்சியுடன் துணையோடு, நிறுத்தப்பட்டுள்ளார். நான் அவரை எதிக்கட்சி வேட்பாளராக பார்க்கவில்லை. ஹெச்.ராஜா இந்தியாவிலேயே கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதி. அவரை போன்ற அரசியல்வாதியை நான் பார்க்கவில்லை.. இனிமேலும் பார்க்க முடியாது கலவரத்தை தூண்டுவதையே வாடிக்கையாக வைத்திருப்பவர்" இவ்வாறு ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் பல விஷயங்களை பேசினார்.

English summary
mk stalin election campaign for karthi chidambaram in sivagangai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X