சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கீழடி அகழாய்வு நிலத்தை பார்வையிட்ட திமுக தலைவர் ஸ்டாலின்!

Google Oneindia Tamil News

Recommended Video

    கீழடி அகழாய்வு நிலத்தை பார்வையிட்ட திமுக தலைவர் ஸ்டாலின்!-வீடியோ

    சிவகங்கை: வைகைக் கரை தமிழ்ப் பண்பாட்டை வெளிப்படுத்தி இருக்கும் கீழடி அகழாய்வு இடங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

    சங்க கால இலக்கியங்கள் சொல்லும் வாழ்வியல் முறை என்பது ரத்தமும் சதையுமாக வாழ்ந்த தமிழர் தம் வாழ்க்கையே; அது புனைவுகள் அல்ல என்பதை கீழடி அகழாய்வு முடிவுகள் வெளிப்படுத்தின. வடக்கே கங்கை நதிக்கரையில் நகர நாகரிகம் கிமுக 6-ம் நூற்றாண்டில் தொடங்கியது.

    MK Stalin visits Keezhadi Excavation

    ஆனால் தெற்கே வைகை நதிக்கரையில் கிமு 6-ம் நூற்றாண்டில் தமிழர்கள் உச்சகட்ட நகர வாழ்வை வாழ்ந்தனர்; தமிழர்கள் எழுத்தறிவுமிக்க அறிவில் சிறந்தவர்களாக பெரும் வளமையான வாழ்வு வாழ்ந்தனர் என்பதை கீழடி அகழாய்வு சான்றுகள் அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கின்றன.

    திமுகவிடமிருந்து ஏன்தான் வாங்குனோமோ.. நாங்குநேரியால் காங்கிரஸ் டென்ஷன்.. புலம்ப வைக்கும் கோஷ்டிகள்!திமுகவிடமிருந்து ஏன்தான் வாங்குனோமோ.. நாங்குநேரியால் காங்கிரஸ் டென்ஷன்.. புலம்ப வைக்கும் கோஷ்டிகள்!

    இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை திருத்தி எழுதும் நிலையை கீழடி அகழாய்வு முடிவுகள் உருவாக்கி இருக்கின்றன. ஒவ்வொரு தமிழருக்கும் பெருமிதத்தையும் தரக்கூடிய கீழடி அகழாய்வு தளத்தை பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டு செல்கின்றனர்.

    MK Stalin visits Keezhadi Excavation

    அண்மையில் நாம் தமிழர் கட்சியியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கீழடி அகழாய்வு இடத்துக்கு சென்று பார்வையிட்டார். அவரைத் தொடர்ந்து இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கீழடிக்கு சென்று அகழாய்வு இடங்களைப் பார்வையிட்டார்.

    MK Stalin visits Keezhadi Excavation

    அவருடன் சிபிஎம் எம்.பி. சு. வெங்கடேசன் மற்றும் திமுகவின் முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் சென்றனர். இது தொடர்பாக, "2600 ஆண்டுகளுக்கும் முற்பட்ட தமிழர் நாகரிகத்தை உலகுக்கு உணர்த்திய கீழடி நிலத்தை பார்வையிட்ட போது" என்ற தலைப்பில் தாம் பார்வையிட்டவீடியோவை ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

    English summary
    DMK President MK Stalind today visited the Keezhadi Excavation land.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X