பகவான் கிருஷ்ணரா மாறுவேன்! என்ன தகுதி இருக்கு? அதிமுக ஊழல் குறித்து பேசுங்க அண்ணாமலை! சீமான் காட்டம்
சிவகங்கை : திமுக ஊழல் குறித்து தொடர்ந்து பேசி வரும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அதிமுக ஊழல்கள் குறித்து ஏன் பேசுவதில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக, பாமக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த 50க்கு மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கட்சியில் இணைந்தவர்களை வரவேற்றார்.
அன்று ”முப்பாட்டன் முருகன்”, இன்று ”கிருஷ்ண பரமாத்மா” பேரன் - சீமான் அறிவித்த ஆன்மீக அரசியல்

நாம் தமிழர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்," தற்போது ஆளும் தி.மு.க. அரசு எதை சாதித்து விட்டது? ஓராண்டு சாதனை என எதற்கு இந்த விளம்பரம்? முதல்வரின் ஓராண்டு சாதனை என்று அரசே மக்கள் காசை எடுத்து சாதனை சாதனை என்று கூட்டம் போட்டு கூறுகிறார்கள். காமராஜர் அதுபோல் கூறவில்லையே. படம் எடுத்து விளம்பரம் தேடுவது தேவையில்லாதது. பேருந்தில் பெண்களுக்கு இலவசம்.

திமுக ஊழல்
பக்கத்தில் மனைவியுடன் அமர்ந்து செல்லும் கணவனுக்கு நான்கு மடங்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை திமுக ஊழல் குறித்து பேசுகிறார். அவருக்கு என்ன தகுதி இருக்கிறது. பாஜக ஆட்சியில் பிரான்சில் இருந்து ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு வரும் பொழுது பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்த கோப்புகள் காணாமல் போனது எப்படி?.

பாஜக அண்ணாமலை
நீரவ் மோடி இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு தப்பி செல்லும் போது 500 கோடி ரூபாயை பாஜகவுக்கு கொடுத்த பின்புதான் நாட்டை விட்டு நான் தப்பினேன் என்று கூறினார். பாஜக திமுகவின் ஊழலை மட்டும் பேசுகிறார்கள். அதிமுகவுடன் பத்தாண்டுகால கூட்டணி வைத்துள்ளதால் அதிமுகவின் ஊழல் குறித்து ஏன் பேசுவதில்லை. நேர்மையானவர் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும்.

கோட்பாடுகள் இல்லை
கன்னியாகுமரியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பாதியை அதானி நொருக்கி உள்ளார். மணல் திருட்டைப் பற்றி பேசுவது இல்லை. அண்ணாமலைக்கும் பாஜகவிற்கும் சாதி, மதம், சாமி இதைத்தவிர வேறு கோட்பாடுகள் இல்லை. தமிழகத்தில் இரண்டு அமைச்சர் மட்டும்தான் ஊழல் செய்துள்ளார்களா?, மற்ற அமைச்சர்கள் எல்லாம் நேர்மையானவர்களா?" என ஆவேசமாக பேசினார்.