சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெரியார் சிலையை உடைத்துவிட்டார்களா? கடும் நடவடிக்கை எடுங்கள்.. எச்.ராஜாவா இப்படி சொல்றது!

அறந்தாங்கியில் பெரியார் சிலையை உடைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டியளித்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

சிவகங்கை: அறந்தாங்கியில் பெரியார் சிலையை உடைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டியளித்து இருக்கிறார்.

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி முடிவிற்கு வந்த பின் அங்கு பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்றது. அதன்பின் திரிபுராவில் இருந்த பிரபலமான லெனின் சிலை அகற்றப்பட்டது.

அதன்பின், அதை போலவே தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அவரின் கருத்துக்கு எச்.ராஜா உடனே மறுப்பு தெரிவித்து மன்னிப்பு கேட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

28 ஆண்டுகளுக்கு பிறகு போட்டியிடும் திமுக.. தென்காசியை தன்வசமாக்கிக் கொள்ளுமா திமுக?28 ஆண்டுகளுக்கு பிறகு போட்டியிடும் திமுக.. தென்காசியை தன்வசமாக்கிக் கொள்ளுமா திமுக?

உடைப்பு

உடைப்பு

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நேற்று பெரியார் சிலை உடைக்கப்பட்டது. பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அரசு மருத்துவமனை அருகே இந்த சிலை இருந்தது. இதைதான் மர்ம நபர்கள் நேற்று உடைத்தனர்.

முக்கிய சிலை

முக்கிய சிலை

1998-ஆம் ஆண்டு பெரியார் சிலையை திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார். இதை உடைத்தது யார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முக்கிய சம்பவம்

முக்கிய சம்பவம்

இதற்கு இடையில் தற்போது இந்த சம்பவம் குறித்து பாஜக கட்சியின் சிவகங்கை வேட்பாளர் எச். ராஜா பேட்டியளித்து இருக்கிறார். அதன்படி பெரியார் சிலை உடைக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை உடனடியாக போலீசார் முறைப்படி விசாரிக்க வேண்டும்.

பேட்டி

பேட்டி

பெரியார் சிலையை உடைத்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் இருக்கும் திமுக கூட்டணி வலுவற்ற கூட்டணி. இந்த கூட்டணியால் தேர்தலில் எந்த விதமான மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. திமுக கூட்டணி இப்போதே தோல்வி அடைந்துவிட்டது, என்று எச்.ராஜா குறிப்பிட்டுள்ளார்.

English summary
Police should arrest those who vandalized Periyar statue says, H Raja in Sivagangai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X