சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பி.எஸ்.எல்.வி.-சி 45 ராக்கெட் … வண்ண பலூன்களை பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு

Google Oneindia Tamil News

சிவகங்கை: பி.எஸ்.எல்.வி.-சி 45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்து, தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் வண்ண பலூன்களை மாணவர்கள் பறக்கவிட்டனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், இஸ்ரோவிற்கு சொந்தமான சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., சி-45 ராக்கெட், மின்னணு நுண்ணறிவு செயற்கைகோளான 'எமிசாட்' மற்றும் 28 வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களை சுமந்து விண்ணில் பாய்ந்தது.

PSLV- C 45 Rocket: Satellites successfully launch the airspace, students appreciation

உலகிலேயே முதன்முறையாக 3 வெவ்வேறு புவி வட்ட பாதையில் செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இதன் எடை 436 கிலோ ஆகும். ராணுவ உளவு செயல்பாட்டுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்கிற தகவலை மாணவர்கள் முன்னிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் எடுத்து கூறினார்.

PSLV- C 45 Rocket: Satellites successfully launch the airspace, students appreciation

காஷ்மீர்.. ஒமர் அப்துல்லா பேச்சால் காங்கிரசுக்கு சிக்கல்.. தேர்தல் பிரச்சாரத்தில் திடீர் திருப்பம் காஷ்மீர்.. ஒமர் அப்துல்லா பேச்சால் காங்கிரசுக்கு சிக்கல்.. தேர்தல் பிரச்சாரத்தில் திடீர் திருப்பம்

இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு , பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

PSLV- C 45 Rocket: Satellites successfully launch the airspace, students appreciation

இதற்கிடையே, நேற்று முதன் முறையாக விண்ணில் செலுத்திய ராக்கெட்டை பார்க்க சோதனை ரீதியாக 1,200 பேர் அனுமதிக்கப்பட்டனர். வரும் நாட்களில் அதிகம் பேர் அனுமதிக்கப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது

English summary
Satellites successfully launch the airspace, Devakottai Chairman Manickavasagam Middle School students appreciation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X