சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மலேசியா வாழ் தமிழர்கள் நடத்திய ஆங்கிலமும் நானும்.. கருத்தரங்கம்!

Google Oneindia Tamil News

காரைக்குடி: காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நேற்று (27.11.18) அன்று, 'டீம் ஆப் நல்லா' அமைப்பைச் சேர்ந்த நல்ல பெருமாள் இராமநாதன் அவர்கள் தலைமையிலான மலேசியாவாழ் தமிழர்கள் குழுவினால், 'ஆங்கிலமும் நானும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

இந்த கருத்தரங்கில், நல்லபெருமாள் இராமநாதன், லதா, கிருஷ்ணன், ஷியாமளா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முதலில், பள்ளித் தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா அவர்கள் அனைவரையும் வரவேற்றார். மாணவர்களுடன் பேசுகையில் நல்லபெருமாள் இராமநாதன் கூறியதாவது,

Seminar on English

ஆங்கிலத்தின் அவசியம் குறித்தும், தினமும் 6௦ நிமிடங்கள் ஆங்கிலம் கண்டிப்பாக வாசிக்கவேண்டும் என்பது குறித்தும், அனைத்தையும் முயற்சி செய்து கற்கவேண்டும் (INKUIT) என்றும் வலியுறித்திக் கூறி, மாணவர்களுக்கு ஊக்கமூட்டினார்.

Seminar on English

மலேசியாவில் இருந்து விடுமுறைக்காக இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள நேரத்தில், அரசுப் பள்ளிக்குச் சென்று ஆங்கிலம் குறித்த பயன்பாட்டை கற்பிக்கவேண்டும் என்ற நோக்கத்தில், தன்னார்வத்துடன் இக்குழு கடந்த இரு ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. இந்தியாவை தாய் நாடாகக் கொண்ட இக்குழு, ஒவ்வொரு அரசுப் பள்ளியாகச் சென்று ஆர்வமுடன் செயலாற்றி வருகின்றனர்.

Seminar on English

மேலும், கருத்தரங்க நிகழ்வில் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடனும், உற்சாகத்துடனும் பங்கேற்றதாக, திரு. நல்லபெருமாள் இராமநாதன் அவர்கள் கூறினார். ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டினார்கள்.

Seminar on English

'டீம் ஆப் நல்லா' குழுவினர் ஆசிரியர்களுடனும் கலந்துரையாடினார். இறுதியில், மாணவர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு, மகிழ்ச்சியுடன் விடைபெற்றனர் மலேசிய ஆசிரியர் திரு. நல்லபெருமாள் இராமநாதன் மற்றும் அவர்களின் குழுவினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் திருமதி. மீனாட்சி அவர்கள் செய்திருந்தார்.

English summary
A seminar was conducted in Ramanathan Chettiyar Municipal high school in Karaikudi recently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X