சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்வுகள் இனி இன்பமயமே.. தித்திக்கும் டிப்ஸ் கொடுத்த எஸ்எஸ் கோட்டை சக்திவேல்!

Google Oneindia Tamil News

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று ( 08.06.2019 ) இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி பியர்ல் சங்கமம் இன்டராக்ட் சார்பில் "தேர்வுகள் இனி இன்பமயமே" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

SSLC topper shares his secret formula

இக்கருத்தரங்கத்திற்கு தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் சாமி சத்திய மூர்த்தி அவர்கள் தலைமையேற்றார். 2018 -19 ம் கல்வியாண்டில், சிவகங்கை மாவட்டத்தில், பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற S.S. கோட்டை பள்ளி மாணவர் சண்முகவேல் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பள்ளி மாணவர்களுடன் உரையாடினார்.

SSLC topper shares his secret formula

கவிஞர் ஆரா அவர்கள், காரைக்குடி ரோட்டரி ஆளுநர் முத்துக்குமார் அவர்கள் மற்றும் நலந்தா ஜம்புலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். பள்ளி இன்டராக்ட் சங்கத்தின் தலைவர் மாணவர் தரணிதரன் அனைவரையும் வரவேற்றார்.

SSLC topper shares his secret formula

இந்நிகழ்வில் 2018 -19 ம் கல்வியாண்டில், சிவகங்கை மாவட்டத்தில், பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற S.S. கோட்டை பள்ளி மாணவர் சண்முகவேல் அவர்கள், தான் தேர்வை எதிர்கொண்ட விதம் , நேர மேலாண்மை , கடினப் பகுதிகளை கற்ற விதம், ஆசிரியர்களிடம் எவ்வாறு சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்வது போன்ற தகவல்களை பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி பகிர்ந்து கொண்டார்.

தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் சாமி சத்திய மூர்த்தி அவர்கள் தனது உரையில், மாணவர்கள்' சாதனை மாணவர் சண்முகவேலை எடுத்துக்கட்டாக கொண்டு, ஒவ்வொரு மாணவரும் கற்றலில் முன்னேற்றம் அடைந்து நம் மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

SSLC topper shares his secret formula

தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அவர்கள், மாணவர்கள் தேர்வைப் பற்றிய பயத்தை தவிர்த்து, அதை எதிர்கொள்ளும் விதம் குறித்து அறிந்து கொண்டு, பள்ளிக்கு பெருமை சேர்த்து சாதனை மாணவர்களாக உருவாக வேண்டும் எனக் கூறினார்.

சாதனை மாணவருக்கு பள்ளி ஆசிரியர்கள் சார்பில் நன்கொடைகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பெற்றோர்களும் கலந்து கொண்டு சாதனை மாணவரிடம் உரையாடி, தங்களது சந்தேகங்களை கேட்டு, விளக்கம் பெற்றார்கள்.

SSLC topper shares his secret formula

நிகழ்வின் இறுதியில், உதவி தலைமையாசிரியர் உமா அவர்கள் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜாக்குலின் கனிமொழி அவர்கள், கோமதிஜெயம் அவர்கள், ராதிகா அவர்கள் மற்றும் கீதா அவர்கள் செய்திருந்தார்கள்.

English summary
SSLC topper Sakthivel shared his secret behind the success with other students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X