இந்தக் காலத்தில் இப்படி ஒரு கிராமமா...? ஒழுக்கத்தின் உயர்விடமாக திகழும் மக்கள்
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மதுவுக்கும், வரதட்சனைக்கும் முன்னோர்கள் காலத்தில் விதிக்கப்பட்ட தடை காலம் காலமாக இன்றும் தொடர்ந்து வருகிறது.
இதனால் அந்தக் கிராமம் ஒழுக்கத்தின் உயர்விடமாக திகழ்வதோடு மற்ற ஊர்களுக்கும் முன்னோடி கிராமமாகவும், வழிகாட்டியாகவும் விளங்குகிறது.
மதுவில்லா, வரதட்சனையில்லா அந்தக் கிராமத்தில் பெண் கொடுப்பதற்காக ஆலவிளாம்பட்டி சுற்றுவட்டார கிராம மக்கள் போட்டி போடுகின்றனர்.
தம்ப்ரி.. மூளை உங்களுக்காக வேலை செய்யுது.. நீங்க மூளைக்காக வேலை செய்றீங்களா?!

விவசாயம்
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ளது ஆலவிளாம்பட்டி என்ற அற்புத கிராமம். இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் விவசாய தொழிலையே பூர்வீகமாக கொண்டிருக்கின்றனர்.

மனக்கட்டுபாடு
ஆலவிளாம்பட்டி கிராம மக்கள் ராமசுவாமி மற்றும் பொன்னழகி அம்மாளை இஷ்ட தெய்வங்களாக பல நூற்றாண்டுகளாக வழிபட்டு வருவதாக கூறப்படுகிறது. அப்படி வழிபடும் அவர்கள் மது அருந்தமாட்டோம் என்றும், வரதட்சனை பெற மாட்டோம் எனவும் சத்தியம் செய்து கொடுத்ததாகவும், அந்த சத்தியத்தை பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் பின்பற்றி வருவதாகவும் கூறுகின்றனர்.

வரதட்சனைக்கு தடை
ஆலம்விளாம்பட்டி கிராமத்தில் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இதுவரை எந்தக் குடும்பத்திலும் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டதில்லை என்றும், வரதட்சனை கொடுமை என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் அந்தக் கிராமமக்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.

ஒழுக்கம்
இந்தக் கிராமத்தில் பெண் கொடுப்பதற்காக பெரிய போட்டியே நடக்கிறதாம். காரணம் இளைஞர்கள் யாருக்கும் மதுவாசமே தெரியாது என்பதாலும், வரதட்சனை பிரச்சனை இல்லை என்பதாலும் அங்கு வாக்குப்பட்டு போக சுற்றுப்பட்டு கிராம இளம்பெண்கள் விரும்புகிறார்களாம்.

அச்சம்
ஊர் விதியை மீறி யாரேனும் மது அருந்திவிட்டு வெளியூர்க்காரர்கள் கிராமத்திற்குள் நுழைந்தால் அவர்களை பிடித்து வைத்து கிராம மக்கள் சார்பாக தண்டனை வழங்கப்படுகிறது. இதன் காரணமாக வெளியூர்க்காரர்கள் கூட மது அருந்தாமலேயே ஆலவிளாம்பட்டி கிராமத்திற்குள் நுழைகின்றனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!