சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யாரு... ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமா.. இவ்வளவு பக்குவமா பேசுறாப்ள..!

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok sabha results | இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை தருவது முதல் பணி: கார்த்தி சிதம்பரம்

    சிவகங்கை: மத்திய மாநில அரசுகள் எந்த கட்சியாக இருந்தாலும் அது இந்திய அரசு தான் என்றும் அரசு வழியில் தமிழகத்திற்கு நலத்திட்டங்களை பெற்றுத்தருவேன் என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    நாடளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார் கார்த்தி சிதம்பரம். இதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் எச் ராஜாவை விட 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றார்.

    இந்நிலையில் காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, என்னுடைய முதன்மையான பணி அதிக அளவில் தனியார் துறை மூலமாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வாங்கித் தருவது.

    2வது இன்னிங்ஸ் தொடங்குகிறது.. இன்று ஆட்சி அமைக்க உரிமை கோரும் மோடி.. குடியரசுத்தலைவரை சந்திக்கிறார்! 2வது இன்னிங்ஸ் தொடங்குகிறது.. இன்று ஆட்சி அமைக்க உரிமை கோரும் மோடி.. குடியரசுத்தலைவரை சந்திக்கிறார்!

    என்னுடைய கடமை

    என்னுடைய கடமை

    மக்கள் நலம் சார்ந்த திட்டங்களை எந்த அரசாங்கமாக இருந்தாலும், முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுப்பேன். அது என்னுடைய கடமை. அந்தக் கடமையை நான்முழுமையாக நிறைவேற்றுவேன்.

    மாற்றம் வேண்டும்

    மாற்றம் வேண்டும்

    கார்த்தி சிதம்பரம்.காவிரி குண்டாறு திட்டம் போன்ற நீர் மேலாண்மை திட்டங்களை அமல் படுத்துவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வேன். ஸ்டாலின் அமைத்த கூட்டணியின் அமோக வெற்றிக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

    பாகுபாடு கூடாது

    பாகுபாடு கூடாது

    தேர்தல் மிகவும் அமைதியாக நடந்தது. இதற்காக உழைத்த அரசு ,அதிகாரிகள் காவல்துறை நண்பர்கள், எனது கட்சியினர் அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஒரு அரசாங்கம் வந்தாலும் அது இந்திய அரசாக நினைத்து செயல்பட வேண்டும். கட்சி பாகுபாடு பார்க்கக்கூடாது.

    அவனுக்கென்று ஒரு குணம்

    அவனுக்கென்று ஒரு குணம்


    எந்த அரசாங்கமானாலும் அரசாங்கத்தின் வழியில் நலத்திட்டங்களை பெற்று தருவேன்.
    தமிழன் என்று ஒரு இனம் உண்டு. அவனுக்கென்று ஒரு குணம் உண்டு என பாஜகவின் தோல்வி குறித்தும் கார்த்தி சிதம்பரம் விமர்சித்தார்.

    English summary
    Karthi Chidambaram has said will bring the plans through govt to Tamilnadu. Karthi Chidambaram wins in Sivagangai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X