என் கடைசி மூச்சு இருக்கும் வரை பாஜகவை எதிர்ப்பேன். தமிழகத்தில் பாஜக மலராது: ப. சிதம்பரம்
காரைக்குடி: என் கடைசி மூச்சு இருக்கும் வரை பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்பேன்; தமிழகத்தில் பாஜக ஒருபோதும் மலராது என மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்தார்.
காரைக்குடியில் பிரசார கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது:

அதிமுக தலைமையிலான அரசு வெற்றுப் பேச்சு அரசு. இதற்கு பின்னணி குரல் தருபவர்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா. ஏப்ரல் 6-ந் தேதிக்கு மேல் தேர்வு வைத்து இருக்கலாம். ஆனால் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் சுயநலமாக முடிவெடுத்து உள்ளார்கள்.
பெட்ரோல் டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. பொதுமக்கள் முணுமுணுத்துக் கொண்டே பெட்ரோல் டீசலை போட்டுச் செல்கின்றனர்.
குளிர் காலமே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம்..கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சரி ஆகிடும்..அமைச்சர் விளக்கம்
தமிழகத்தில் மூன்றாவது அணி அமைக்கும் கட்சிகள் அனைத்துமே மறைமுகமாக பாஜகவுடன் பேசி வருகிறார்கள். தமிழகத்தில் பாஜக ஒருபோதும் மலராது. பாஜக எனும் நச்சு செடி வேரூன்ற தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். என் கடைசி மூச்சுவரை பாஜகவை எதிர்ப்பேன்.
கடன் தள்ளுபடிக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கலாம். தமிழக அரசின் நகை கடன் தள்ளுபடி குறித்து அமைச்சரவை கூடித்தான் முடிவு எடுக்க வேண்டும். தமிழக அரசின் நகை கடன் தள்ளுபடி அறிவிப்பில் விதி மீறல் உள்ளது. இவ்வாறு ப. சிதம்பரம் கூறினார்.