சிவகங்கையில் சோகம்... மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி 2 வீரர்கள் உயிரிழப்பு!
சிவகங்கை: திருப்பத்தூர் அருகே உள்ள சிராவயல் கிராமத்தில் நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி 2 பேர் உயிரிழந்தனர்.
மேலும் படுகாயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சிராவயல் கிராமத்தில் ஆண்டுதோறும் தை மாதம் 3-ம் நாள் பாரம்பரியமாக மஞ்சுவிரட்டு நடத்தப்படும். அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போன்று இப்பகுதியில் நடத்தபப்டும் மஞ்சுவிரட்டு பிரசித்தி பெற்றது ஆகும்.

அதன்படி சிராவயலில் இன்று மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட காளை மாடுகள் போட்டியில் பங்கேற்றன. சீறிபாய்ந்து வந்த காளைகளை, காளையர்கள் அடக்கினர். காளை மாடுகளை அடக்க முயன்ற 2 பேர் மாடு முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும்,காளைகள் முட்டியதில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.