சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்ன கண்றாவி.. "தனிமை"யில் இருந்த வி.ஏ.ஓ வித்யாவும், ஊராட்சி தலைவரும்.. சிறை பிடித்த சிவகங்கை மக்கள்

சிவகங்கை: பெண் விஏஓ, ஊராட்சி மன்ற தலைவரை ஊர் மக்கள் சிறைபிடித்தனர்

Google Oneindia Tamil News

சிவகங்கை: ஊராட்சி மன்ற தலைவரான கண்ணனுடன், வி.ஏ.ஓ வித்யாவுக்கு தீவிரமான கள்ளக்காதல் இருந்துள்ளது.. கள்ளக்காதலனை தேடி விஏஓ வித்யா, அவரது வீட்டிற்கு வரும்போது, ஊர் மக்கள் 2 பேரையுமே சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை தந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் சொக்கநாதன்புத்தூர் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருபவர் வித்யா.. இதே கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கண்ணன்.. இவர்களுக்குள் ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த பழக்கம் நாளடைவில் காதலாக பத்தி கொண்டது.

 village president and vaos illegal relationship in sivagangai

அதனால் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்துள்ளனர்.. இதற்காகவே கண்ணன் வீட்டிற்கு வித்யா வந்து போவாராம்.. அரசு அதிகாரிகளான 2 பேருக்கும் இங்கே ஒரே வீட்டில் என்ன வேலை என்று கிராம மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.. அப்போதுதான் விஷயமும் தெரிந்துள்ளது.

இதனால், இந்த ஜோடியை கையும் களவுமாக பிடிக்க மக்களே முடிவு செய்தனர்.. அதன்படி, சம்பவத்தன்றும் கண்ணனை தேடி வித்யா சென்றார்.. இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.. இதனால் கொந்தளித்த கிராம மக்கள், வித்யாவின் கணவருக்கு இதை தெரியப்படுத்தினர்.. அவரும் விரைந்து வந்தார்.

அது என்ன நீல நிறத்தில்.. அமைச்சர் செல்லூர் ராஜு அணிந்திருக்கும் அட்டை.. ஜப்பான் மேட்.. இதான் காரணம்!அது என்ன நீல நிறத்தில்.. அமைச்சர் செல்லூர் ராஜு அணிந்திருக்கும் அட்டை.. ஜப்பான் மேட்.. இதான் காரணம்!

பின்னர், வித்யா கணவருடன் ஊர் மக்களும் சேர்ந்து வந்து, கண்ணன் வீட்டினை பூட்டி லவ் ஜோடியை சிறைபிடித்தனர்... மேலும் அக்கம்பக்க பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் திரண்டு வந்துவிட்டனர். இந்த தகவல், பிறகுதான் போலீசுக்கே போனது.. அவசர அவசரமாக விரைந்து வந்த அவர்கள், ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

வித்யா, கண்ணனையும் அவர்களிடம் இருந்து மீட்டனர்.. இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பொது மக்களிடம் போலீசார் உறுதி தெரிவித்னர்.. இப்படி விஏஓவும், ஊராட்சி மன்ற தலைவரும் அடித்த கூத்தும், அதை தொடர்ந்து நடந்த சிறைபிடிப்பு விவகாரமும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
village president and vaos illegal relationship in sivagangai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X