சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிவகங்கையை பாலைவனமாக மாற விடமாட்டோம்… கவிஞர் சினேகன் பிரச்சாரம்

Google Oneindia Tamil News

சிவகங்கை: பாலைவனமாக மாறி வரும் சிவகங்கையில் விவசாயத்தை மீட்கவும், நீர் ஆதாரத்தை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் கவிஞர் சினேகன் வாக்குறுதி அளித்துள்ளார்.

சிவகங்கை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் கவிஞர் சினேகன், கவிஞர் கண்ணதாசனின் சொந்த ஊரான சிறுகூடல்பட்டியில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார்.

We will Reclaim agriculture in Sivagangai : poet Snehan campaign

கண்ணதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்கான மாற்றத்தைக் கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்றும் 40 ஆண்டுகளில் இல்லாத ஒரு மாற்றத்தை நாங்கள் தருவோம் என்றும் தெரிவித்தார்.

மேலும், ஒன்றிணைந்த ராமநாதபுரம் மாவட்டமாக இருந்த போது சோலை வனமாக இருந்த செழிமை, கடந்த பதினைந்து, இருபது ஆண்டுகளாக மாறி போய் இருக்கிறது. இப்படியே போனால், இன்னொரு பத்து வருடம் கழித்து பாலைவனமாக மாறிவிடும் என்ற ஒரு மிகப் பெரிய பயம் இருக்கிறது.

பார்றா... கமலோட பிரச்சார டெக்னிக்க! குறைசொல்லி ஓட்டுக்கேட்க மாட்டாராம்! பார்றா... கமலோட பிரச்சார டெக்னிக்க! குறைசொல்லி ஓட்டுக்கேட்க மாட்டாராம்!

மிகச்சிறந்த தொழிற்சாலைகள் இங்கு உருவாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நீர் ஆதாரத்தைப் பெருக்கி விவசாயத்தை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள மக்கள், சொந்த மண்ணை விட்டு வெளியேறி, வேறு இடங்களில் வாழும் ஒரு நிலைமை வரக்கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறது மக்கள் நீதி மய்யம் எனவும் கூறினார்.

English summary
We will not Allowed turn Sivagangai Like desert: Poet Snehan campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X