சிவகாசி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஆறு பேர் பலி - டாக்டர் ராமதாஸ், கமல் இரங்கல்

சிவகாசி பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் இரங்கல்

Google Oneindia Tamil News

சிவகாசி: சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான தங்கராஜ் பாண்டியன் பட்டாசு ஆலையில் இன்று மாலை பேன்ஸி ரக பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த விபத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பட்டாசு விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தீக்காயங்களுடன் தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பட்டாசு ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

6 killed in Sivakasi firecracker factory blast PMK Dr Ramadoss condolence

சிவகாசி, சாத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் சிறியதும் பெரியதுமாக உள்ளன. அங்கு அடிக்கடி பட்டாசு விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. கடந்த 12ஆம் தேதி அச்சங்குளத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 20க்கும் மேற்பட்ட அறைகள் சேதமடைந்தன. 23 பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்த சில தினங்களில் காக்கிவாடன் பட்டியில் வெடி விபத்து ஏற்பட்டு ஒருவர் காயமடைந்தார். கடந்த 2 வாரத்தில் சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் நிகழ்ந்த 3வது விபத்தாகும்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியோனோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு - 20 பேர் படுகாயம்சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியோனோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு - 20 பேர் படுகாயம்

பட்டாசு ஆலை விபத்து குறித்து பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துள்ளார். தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிவகாசியை அடுத்த காளையர்குறிச்சியில் பட்டாசு ஆலை விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்த 6 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் எனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

சிவகாசி பகுதியில் இந்த மாதத்தில் நிகழ்ந்த மூன்றாவது பட்டாசு ஆலை விபத்து இது என்பது அதிர்ச்சியளிக்கிறது. உடனடியாக அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பாதுகாப்பு தணிக்கை மேற்கொண்டு பட்டாசு ஆலைகள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு உலகத்தர மருத்துவம் வழங்குவதுடன் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

பட்டாசு விபத்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், அடுத்தடுத்து நடைபெறும் விபத்துக்களுக்கு அரசு என்ன செய்யப்போகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பட்டாசுத் தொழில்துறையில், பாதுகாப்புக்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் என்ன என்று நீதிமன்றம் சினக் கேள்வி எழுப்பி முடிப்பதற்குள் சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு ஆறு பேர் பலியாகியிருக்கிறார்கள். இனியும் அரசு மௌனம்தான் காக்கப்போகிறதா? என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.

English summary
Six killed 12 workers critically injured in an explosion at a fireworks factory in Kalaiyarkuruchi, near Sivakasi on Thursday, PMK leader Dr Ramadoss and MNM leader Kamal haasan who expressed their condolences to the bereaved families
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X